விஜய் சேதுபதி நடிக்கும் படத்தில் மம்முட்டி நடிக்க இருந்தது, இதனை அடுத்து தற்போது அந்த படத்தை விட்டு மம்முட்டி விலகி அவருக்கு பதிலாக வேறொரு நடிகரை ஒப்பந்தம் செய்து இருக்கிறார்கள்.
தமிழ் திரை உலகில் எம்.ஜி.ஆருக்கு அடுத்து மக்கள் செல்வன் என்று அன்போடு அழைக்கப்படும் விஜயசேதுபதி தற்போது பேன் இந்திய நடிகராக உயர்ந்துவிட்டார்.
ஜவான் படத்திற்கு பிறகு அவரது மார்க்கெட் வேறு லெவலுக்கு சென்று விட்டது என கூறலாம்.
இதனை அடுத்து தற்போது இவர் மேரி கிறிஸ்மஸ், காந்தி டாஸ்க் போன்ற ஹிந்தி திரைப்படங்களில் நடித்து வருகிறார்.
தமிழிலும் ஏராளமான படங்களை கைவசம் வைத்திருக்கும் இவர் மகாராஜா மற்றும் ட்ரெயின் போன்ற படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார்.
மேலும் மகாராஜா திரைப்படமானது விஜய் சேதுபதியின் ஐம்பதாவது திரைப்படம்.
தற்போது மிஷ்கின் இயக்கத்தில் உருவாகும் ட்ரெயின் படத்தில் ஹீரோவாக நடித்தவரும் விஜய் சேதுபதி இது தவிர காக்கா முட்டை, கடைசி விவசாயி போன்ற படங்களை இயக்கிய மணிகண்டன் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்க கமிட் ஆகி இருக்கிறார்.
இந்த படத்தை ஹாட்ஸ்டார் நிறுவனம் தயாரிக்க உள்ளது.
இந்த படத்தில் விஜய் சேதுபதியோடு இணைந்து மம்முட்டி முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பதாக தகவல்கள் வெளிவந்த நிலையில் தற்போது ஷூட்டிங் தொடங்கும் முன்பே இந்த படத்தில் இருந்து விலகி விட்டார் என்ற செய்திகளும் வந்துள்ளது.
இதற்கு காரணம் இதை திரைப்படமாக எடுக்க திட்டமிட்டு இருந்தவர்கள் தற்போது அதனை வெப் தொடராக எடுக்க முடிவு செய்ததால் தான் மம்முட்டி நடிக்க மறுப்பு தெரிவித்து விலகி விட்டார்.
இந்த சூழ்நிலையில் இந்த கேரக்டர் ரோலை அவருக்கு பதிலாக பாலிவுட் நடிகர் ஜாக்கி ஷெராப் நடிக்க உள்ளார்.
இவர் அண்மையில் வெளிவந்த ஜெய்லர் திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருப்பார்.
இதனை அடுத்து விஜய் சேதுபதியின் ரசிகர்கள் அனைவரும் இந்த வெப்றொடரை காண்பதற்கு ஆவலாக காத்திருக்கிறார்கள்