திரைப்படங்களில் நடிக்க வேண்டும் என்று வெறியோடு இருப்பவர்கள் அதற்காக பல வகைகளில் பலவிதமான தியாகங்களை செய்வதோடு நடிகைகள் என்றால் அதற்கு தகுந்தபடி நடந்து சினிமாவில் ஜொலிக்க தயாராவார்கள்.
அந்த வரிசையில் எண்பதுகளில் பிரபல நடிகையாக ரசிகர்களின் மனதில் தனக்கு என்று ஒரு இடம் பிடித்த நடிகை இவர் தமிழ் மொழி மட்டுமல்லாமல் தெலுங்கு, கன்னடம் என தென்னிந்திய மொழிகள் பலவற்றில் நடித்திருக்கிறார்.
திருமணம் செய்து கொண்டதற்குப் பிறகு சினிமாவில் நடிப்பதை தவிர்த்து விட்ட இந்த நடிகை தற்போது பேட்டி ஒன்றில் கலந்து கொண்டு தனது அனுபவங்கள் பற்றி பல விஷயங்களை பகிர்ந்து இருக்கிறார்.
அந்த வகையில் இவர் தனது 14 வது வயதில் இருந்தே நடிக்க வந்ததின் காரணத்தால் உடலை பெரிதாக காட்ட அதற்குரிய ஹார்மோன் ஊசிகளை போட்டுக் கொண்டதாக கூறியிருக்கிறார்.
அதுமட்டுமல்லாமல் இவரோடு இணைந்து பயணித்த நடிகைகள் எல்லோருமே சற்று குண்டாக தான் இருப்பார்களாம். அப்படி இருந்தால் மட்டும்தான் பட வாய்ப்பு கிடைத்தது என்ற காரணத்தால் தான் ஹார்மோன் ஊசி போட்டு உடல் எடையை அதிகரித்தாராம்.
அப்படி உடல் எடை கூறிய பிறகு இவருக்கு சினிமாவில் நடிக்க கூடிய வாய்ப்புகள் ஏற்பட்டதாகவும், எனினும் அந்த ஊசி போட்டுக்கொண்டதன் காரணத்தால் பக்க விளைவு ஏற்பட்டு அது தனது கர்ப்ப காலத்தை பாதித்தது என்றும் கூறியிருக்கிறார்.
இந்த நடிகை இப்படி ஊசி போட்டுக் கொண்ட விவகாரம் அவர் அம்மாவிற்கு மிக நன்றாக தெரியும். ஆனால் அப்பாவுக்கு தெரியாது என்று தன் உடல் குண்டாக காரணம் என்ன என்பதை வெளிப்படையாக நடிகை பாக்கியலட்சுமி கூறினார்.
இந்தப் பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் நீங்கள் மறக்காமல் வண்ணத்திரை பக்கத்திற்கு ஆதரவு கொடுத்து உங்கள் நண்பர்களுக்கும் ஷேர் செய்யுங்கள்.