இந்த ஜென்மத்துல அது வாய்ப்பில்ல..! - ரகசியம் உடைத்த ரச்சிதா மகாலட்சுமி..!

 

சின்னத்திரையில் நடித்து வந்த தினேஷ் மற்றும் ரச்சிதா மகாலட்சுமி காதலித்து திருமணம் செய்து கொண்டார்கள். 2015 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்ட இவர்கள் கடந்த மூன்று ஆண்டுகளாக கருத்து வேற்றுமை ஏற்பட்டதின் காரணத்தால் பிரிந்து வாழ்ந்து வருகிறார்கள். 

இதனை அடுத்து விஜய் டிவியில் நிகழும் பிரம்மாண்டமான பிக் பாஸ் சீசன் 7ல் வைல்டு கார்ட் போட்டியாளராக களம் இறங்கி இருக்கும் நடிகர் தினேஷ் இந்த போட்டியில் மிக சிறப்பாக விளையாடி வருகிறார். இதனை அடுத்து இவர் தனது வாழ்க்கையில் பூகம்பத்தை ஏற்படுத்திய நிகழ்வினை பகிர்ந்திருக்கிறார். 

இந்த நிகழ்வில் தனது மனைவியோடு ஏற்பட்ட பிரச்சனை தான் எனக்கு வாழ்க்கையில் மிகப்பெரிய கஷ்டமான சூழ்நிலையை உருவாக்கியது எனக் கூறியிருக்கிறார். மேலும் இவர்கள் இருவரும் பிரபலங்கள் என்பதால் இவர்களுக்கான அடையாளம் அனைவருக்கும் தெரியும்.

அது மட்டும் அல்லாமல் கணவன், மனைவிக்குள் ஏற்படும் சில பல பிரச்சனைகள் தான் இவர்களுக்குள்ளும் நடந்து உள்ளதாம். இதனை அடுத்து பலரும் தினேஷுக்கு ஆதரவாக பேசி ரச்சிதாவுடன் சேர்ந்து வாழ அட்வைஸுகளை கொடுத்திருக்கிறார்கள். 

இந்த நிலையில் நடிகை ரச்சிதா தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரில் வலி என்பது எல்லோருக்கும் ஏற்படும். ஆனால் அந்த வலியை ஏற்படுத்தியவர்களை பற்றி இன்னும் பேசிக் கொண்டு தான் இருக்கிறோம். எனவே வலியை அனுபவித்தவர்கள் கட்டாயம் உறுதியான முடிவில் இருக்க வேண்டும். 

எவ்வளவு வலியை அனுபவித்தோமோ அந்த சமயத்தில் யாரும் நமக்காக யோசிக்கவே இல்லை.எனவே பட்டவர்களுக்கு தான் அதன் வலி அதிகம் தெரியும் என பகிர்ந்திருக்கிறார். இந்த கருத்தைப் பார்த்து தினேஷுடன் ரச்சிதா சேர்ந்து வாழ வாய்ப்பே இல்லை என்பதை தான் மறைமுகமாக இந்த கருத்தை தெரிவித்திருக்கிறார் என்று பலரும் கலவை ரீதியான விமர்சனங்களை முன் வைத்து இருக்கிறார்கள். 

உங்களுக்கு இந்தப் பதிவு பிடித்திருந்தால் மறக்காமல் வண்ணத்திரை பக்கத்திற்கு உங்கள் மேலான ஆதரவை கொடுங்கள். இந்த பதிவினை உங்கள் நண்பர்களுக்கும் ஷேர் செய்யுங்கள்.