அடையாளம் தந்த சென்னையை மறந்த விஜே ரம்யா..!! - விளாசும் நெட்டிசன்கள்..!

 

விஜய் டிவியில் பணியாற்றிய நடிகைகள் அனைவருமே வெள்ளி திரைக்கு செல்வது வாடிக்கையான ஒன்றாக மாறிவிட்டது. அதில் சின்னத்திரை தொகுப்பாளிகள் கூட நேரடியாக எந்த பிரச்சனையும் இல்லாமல் வெள்ளி திரைக்கு சென்று அங்கு கொடி கட்டி பறக்கக்கூடிய காலம் தற்போது ஏற்பட்டு உள்ளது. 

அந்த வகையில் விஜய் டிவியில் விஜே - வாக பணியாற்றிய சிவகார்த்திகேயன் முதல் மாகாபா, ரக்ஷன், ஜாக்குலின், டிடி, பிரியங்கா என்று வெள்ளித்திரைக்குச் சென்ற நபர்களை எளிதாக விரல் விட்டு கூறி விடலாம். 

அந்த வகையில் விஜே ரம்யா மொழி, ஓ காதல் கண்மணி, மாசு என்கின்ற மாசிலாமணி, ஆடை, மாஸ்டர் போன்ற படங்களில் சில முக்கிய கேரக்டர் ரோல்களில் நடித்து அசத்தியவர். 

மேலும் சின்ன, சின்ன ரோல்களில் நடித்து துணை நடிகையாக இருந்த ரம்யா தற்போது கதாநாயகியாக நடிக்க களம் இறங்கியுள்ளார். இதனை அடுத்து இவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஹாட்டான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை மாஸாக தன் பக்கம் ஈர்த்துவிடுவார்.

இந்நிலையில் தற்போது மிக்ஜாம் புயலால் கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கும் சென்னை, அதில் இருந்து எப்படி மீண்டு வெளியே வருவது என தெரியாமல் மக்கள் திணறி வரக்கூடிய சூழ்நிலையில் சென்னை தன்னை கைவிட்டதாக ரம்யா பதிவு செய்து இருப்பதை பார்த்து நெட்டிசன்களுக்கு கோபம் தலைக்கு ஏறிவிட்டது. 

தனக்கு என்று ஒரு அடையாளத்தை கொடுத்த சென்னையை மறந்து விட்டு தற்போது அடைக்கலம் கொடுத்திருக்கும் தெலுங்கானாவை இவர் பெரிதாக பேசி இருப்பது நன்றி மறந்த செயல் என்று கூறி இருக்கிறார்கள். 

மேலும் நீங்கள் எப்படியும் சென்னைக்கு மீண்டும் திரும்பி வந்துதானே ஆக வேண்டும். அப்போது பார்க்கலாம் என்பது போல நெட்டின்சன்கள் கோபமாக கருத்துக்களை சொல்லி வருகிறார்கள்.