தென்னிந்திய திரைப்படங்களின் அதிகளவு முன்னணி கதாநாயகிகளோடு நடித்து லேடிஸ் சூப்பர் ஸ்டார் என்ற பெயரை பெற்றிருக்கும் நயன்தாரா கேரளாவை சேர்ந்தவர்.
ஆரம்ப காலத்தில் மலையாள படங்களில் நடித்த இவர் படிப்படியாக தமிழ், தெலுங்கு, ஹிந்தி போன்ற படங்களில் நடிக்க ஆரம்பித்தார்.
திரைப்படங்களில் நடிப்பதோடு மட்டுமல்லாமல் பல தொழில்களில் முதலீடு செய்து தொழில் அதிபராகவும் திகழ்ந்துவரும் நயன்தாரா, டிசம்பர் 1-ம் தேதி வெளி வந்த அன்னபூரணி என்ற திரைப்படத்தில் நடித்திருக்கிறார்.
இந்த திரைப்படத்தை சங்கரிடம் உதவி இயக்குனராக பணி செய்த நிலேஷ் கிருஷ்ணா என்பவர் இயக்கி இருக்கிறார். இந்த படமும் நயன்தாராவின் கனவான செஃப் ஆசையை பல தடைகளை தகர்த்து எறிந்து ஜெயித்து காட்டுவதாக அமைந்துள்ளது.
மேலும் இந்த படத்தில் நயன்தாராவுடன் சத்தியராஜ், ஜெய், கே.எஸ் ரவிக்குமார், சுரேஷ் சக்கரவர்த்தி, சச்சு கார்த்திக் குமார் உள்ளிட்ட பல நடிகர்கள் நடித்து அவரவர் திறமையை நேர்த்தியான முறையில் வெளிப்படுத்தி இருக்கிறார்கள்.
இந்தப் படத்தை ஜி ஸ்டுடியோஸ், நாட் ஸ்டுடியோஸ், டிரைடன்ட் ஆர்ட்ஸ் இணைந்து தயாரித்துள்ளது. மேலும் படத்திற்கான இசையை வாரிசு இசையமைப்பாளர் ஆன தமன் இசையமைத்திருக்கிறார். இந்த திரைப்படமானது தற்போது திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடி வருகிறது.
மேலும் இந்த படத்தின் பிரமோஷனுக்காக நயன்தாரா ரசிகர்களுக்கு பிரியாணி விருது வைத்து அசத்து இருக்கிறார். இவருடன் ஜெயும் இந்த நிகழ்வில் கலந்து கொண்டிருக்கிறார். ஜவான் பட வெற்றியை அடுத்து நயன்தாரா இது போல தொடர்ந்து ப்ரோமோஷன்களில் பங்கேற்று வருவது குறிப்பிடத்தக்கது.
நயன்தாரா பிரியாணியை பரிமாறும் ஸ்டைலைப் பார்த்து அவரது ரசிகர்கள் அனைவரும் அவருக்கு மனதார வாழ்த்துக்களை தெரிவித்து இருக்கிறார்கள். இன்னும் பல பட வாய்ப்புகள் கிடைத்து, திரை உலகில் உச்சகட்ட நட்சத்திர அந்தஸ்தை எப்போதும் தக்க வைத்துக் கொள்ள வேண்டும் என கூறி இருக்கிறார்கள்.