என்னிடம் காதலை சொல்லும் போது.. அவரோட மண்டையில இது இல்ல.. மதுபாலா ஓப்பன் டாக்..!

 


ரோஜா படத்தில் அரவிந்தசாமியோடு நடித்த மதுபாலா பற்றி உங்களுக்கு நினைவில் இருக்கலாம். காஷ்மீரில் பனி மலைகளுக்கு மத்தியில் இவர்கள் செய்த ரொமான்டிக் காட்சிகள் என்றும் பசுமையாக இளைஞர்களின் மத்தியில் உள்ளது. 

மதுபாலா 90-களில் ஒரு பிரபலமான நடிகையாக வலம் வந்தவர். இவர் கே பாலச்சந்தர் இயக்கத்தில் 1991 ஆம் ஆண்டு வெளிவந்த அழகன் என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகம் செய்து வைக்கப்பட்டார். 

எனினும் ரோஜா படம் தான் இவருக்கு மக்கள் மத்தியில் செல்வாக்கை அதிகரித்து தந்ததோடு ரசிகர்களின் மனதில் கனவு கன்னியாக வாழ வைத்தது. இந்த படத்தை அடுத்து ஜென்டில்மேன், செந்தமிழ்ச்செல்வன் போன்ற பல ஹிட் படங்களில் நடித்தார். 

பின்னர் 1999 ஆம் ஆண்டு ஆனந்த் ஷா என்பவரை திருமணம் செய்து கொண்டு தற்போது இவர்களுக்கு இரண்டு பெண் குழந்தைகள் இருக்கிறார்கள். சமீபத்தில் பேட்டி ஒன்றில் கலந்து கொண்டு பேசிய மதுபாலா தன்னைப் பற்றிய பல விஷயங்களை பகிர்ந்து இருக்கிறார். 

அந்த வகையில் அவர் பேசும்போது தான் ஒரு நடிகையாக இருந்ததின் காரணத்தால் நிச்சயமாக ஒரு நடிகரை தான் திருமணம் செய்து கொள்வேன் என்ற எதிர்பார்ப்பு அனைவரது மத்தியிலும் இருந்தது. எனினும் நடிக்கும் போது எனக்கு கிடைத்த சில அனுபவங்கள் மூலம் எந்த ஒரு நடிகரையும் திருமணம் செய்து கொள்ளக்கூடாது என்ற எண்ணத்தை அப்போதே உருவாக்கி கொண்டேன். 

இந்நிலையில் ஆனந்தக்கு பெரிதாக ப்ரபோஸ் செய்ய கூட தெரியாது. ஆனால் அவர் என்னை உண்மையாக காதலித்தார் என்பதை நான் புரிந்து கொண்டேன். ஒவ்வொரு சண்டையிலும் அவரிடம் நான் எல்லை மீறி பேசினாலும் அதை புரிந்து கொண்டு எனக்காக விட்டுக்கொண்டு என்னிடம் சரியான முறையில் பழகுவார். 

அதுமட்டுமல்லாமல் அவருக்கு முடி இல்லாதது ஒரு தாழ்வு மனப்பான்மையை ஏற்படுத்தியது. என்னிடம் காதல் சொல்லும் போது கூட அவருக்கு தலை வழுக்கை தான். எனினும் அது ஒரு பிரச்சனையாக எனக்குத் தோன்றவில்லை உண்மையாக காதலிப்பவரை நேசிப்பது தான் முக்கியம் என்பது போல் மதுபாலா பேசினார். 

இதனை அடுத்து மதுபாலா ஏன் ஒரு நடிகரை திருமணம் செய்து கொள்ளாமல் அவரை உண்மையாக நேசித்த நபரை திருமணம் செய்து கொண்டார் என்பதை புரிந்து கொண்ட ரசிகர்கள் அனைவரும் அவரது உண்மையான காதலுக்கு பாராட்டுதல்களை தெரிவித்திருக்கிறார்கள்.