நடிப்பே வராத நடிகைக்கு வந்த யோகத்தை பாருங்க..! - பான் இந்தியா நடிகையாக உயர்ந்த மாளவிகா..!


தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம் என பான் இந்திய நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கும் மாளவிகா, அடுத்தடுத்து உச்சகட்ட அந்தஸ்தை நோக்கி நகர்ந்து வருகிறார். நடிக்கவே தெரியாத இந்த நடிகைக்கு வந்த யோகத்தை பாருங்க என்று கோலிவுட் வட்டாரமே பேசி வருகிறது. 

இந்த மாளவிகா ரஜினி நடிப்பில் வெளி வந்த பேட்ட திரைப்படத்தின் மூலம் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார். மலையாள பேரழகியான இவர் லோகேஷ் கனகராஜ் மற்றும் விஜய் கூட்டணியில் உருவான மாஸ்டர் படத்தில் நடித்து தனக்கு என்று ஒரு ரசிகர் வட்டாரத்தை உருவாக்கி விட்டார். 

உச்சகட்ட நட்சத்திரங்களோடு இவர் இணைந்து நடித்திருந்தாலும், இவரது நடிப்பு சொல்லிக் கொள்ளும்படி இல்லை என்று தான் ரசிகர்கள் பேசி வருகிறார்கள். எனினும் குறுகிய காலத்தில் டாப் நடிகர்களோடு நடித்த அதிர்ஷ்டசாலி என்று இவரை கூறலாம். 

இந்த சூழ்நிலையில் இப்போது டைரக்டர் பா ரஞ்சித் இயக்கத்தில் உருவாக்கி வரும் தங்கலான் என்ற திரைப்படத்தில் சீயான் விக்ரமோடு இணைந்து நடித்து இருக்கிறார். 

மேலும் இந்த படத்தில் நடிக்கும் போது தான் இவருக்கு நடிப்பு சரியாக வரவில்லை என்று இயக்குனர் சாடியதாக பல்வேறு செய்திகள் இணையத்தில் வெளி வந்தது. 

ஆனால் இப்போது நிலைமையே வேற என்று சொல்லக்கூடிய வகையில் அதிர்ஷ்டம் இருந்தால் எல்லாம் ஈசியாக நடக்கும் என்பது போல இந்தியில் நடிக்கக்கூடிய வாய்ப்பு அதிக அளவு மாளவிகாவிற்கு வந்து சேர்ந்துள்ளது. 

அதுமட்டுமல்லாமல் தெலுங்கில் பிரபாஸுக்கு ஜோடியாக ஒரு படத்தில் நடிக்க கமிட் ஆகி இருக்கிறார்.மேலும் இவர் நடிப்பில் வெளி வர இருக்கும் தங்கலான் படத்தில் ஆதிவாசியாக நடித்திருக்கும் இவரது நடிப்பை பார்த்து இவரின் மார்க்கெட் ஜெட் வேகத்தில் உயரும் என்று கூறுகிறார்கள். 

எனவே பொறுத்திருந்து பார்க்கலாம். இன்னும் இவருக்கு அதிர்ஷ்டம் எப்படி கை கொடுக்கிறது என்பது இனி வரும் நாட்களில் எளிதாக தெரிந்து விடும்.