தமிழ் திரையில் கற்றது தமிழ் என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமான நடிகை தான் நடிகை அஞ்சலி. இவர் பல ஆண்டுகளாக திரையுலகில் இருந்தாலும் தனக்கு என்று ஒரு இடத்தை இன்னும் பிடிக்க முடியாமல் தடுமாறி வருகிறார்.
இதனை அடுத்து மற்ற நடிகைகளை போலவே கவர்ச்சியை கட்டவிழ்த்து விட்டால் வாய்ப்புக்கள் அதிகம் வந்து சேருவதற்கான வாய்ப்புகள் உள்ளது என்று கருதி அவர் தெலுங்கு சினிமா பக்கம் சென்று அங்கு கவர்ச்சியை காட்டி நடித்து வருகிறார்.
இந்த சூழ்நிலையில் இவருக்கும் நடிகர் ஜெயிக்கும் இடையே உறவு இருப்பதாக ஊடகங்களில் செய்தி வந்ததோடு மட்டுமல்லாமல் அந்த காரணத்தினால் தான் இவரால் சினிமாவில் அதிக அளவு கவனத்தை செலுத்த முடியவில்லை என்ற குற்றச்சாட்டுகளும் எழுந்தது.
இந்த சூழ்நிலையில் இவர் நடிகர் ஜெயின் காதலை புறக்கணித்துவிட்டு சில காரணங்களால் பிரிந்து விட்டதாக இடையில் செய்திகள் கசிந்தது.
மேலும் சமீபத்தில் நடிகை அஞ்சலி பேட்டி ஒன்றினை கொடுத்திருக்கிறார்.
அந்த பேட்டியில் இவர் தான் ஒரு மோசமான உறவில் இருந்ததாகவும், அந்த உறவானது விஷத்தன்மையை கொண்ட உறவு என்பதை நாளாக, நாளாக தான் புரிந்து கொண்டதாகவும், இதனை அடுத்து அந்த உறவை விட்டு ஒதுங்கி விட்டதாகவும் கூறியிருக்கிறார்.
மேலும் அந்த தவறான உறவுக்காக எனக்கு நானே தண்டனை கொடுத்துக்கொண்டு அதிலிருந்து வெளியே வந்து, தற்போது நடிப்பில் மட்டுமே கவனத்தை செலுத்தி வருவதாக கூறி இருக்கக்கூடியவர். அந்த நபர் யார் என்ற தகவலை கடைசி வரை கூறவில்லை.
எது எப்படியோ தான் செய்தது தவறு என்பதை முற்றிலும் உணர்ந்து கொண்ட இவர் இனியாவது திரைப்படங்களில் கவனத்தை செலுத்துவது மூலம் படங்களில் நடிக்கக்கூடிய வாய்ப்புகள் வந்து சேருவதோடு மட்டுமல்லாமல் தனக்கு என்று ஒரு இடத்தை தக்க வைக்க முடியும் என்பதை உணர்ந்து கொண்டால் போதுமானது.
இந்தப் பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் மறக்காமல் வண்ணத்திரை பக்கத்திற்கு லைக் கொடுத்துவிட்டு, உங்கள் நண்பர்களுக்கும் இந்த பதிவினை ஷேர் செய்யுங்கள்.