இந்த நடிகையால் திரை உலகை விட்டு நடிகர் சிவகுமார் விலகினாராமே..? - வெளி வந்த உண்மை..!

 

நடிகர் சிவகுமார் நடிப்பில் தனக்கு என்று ஒரு பாதையை வகுத்து அந்த வழியில் நடித்ததின் காரணமாக இன்றும் இளமையோடு இருக்கும் நடிகர்களில் ஒருவராக திகழ்கிறார். 

அண்மையில் நடந்த நிகழ்வு ஒன்றில் நடிகர் சிவகுமார் திரையுலகை விட்டு விலக காரணமாக இருந்த நடிகையைப் பற்றி இயக்குனரும் பத்திரிகையாளருமான சித்ரா லக்ஷ்மணன் விரிவாக கூறினார். 

தமிழ் சினிமா எத்தனை காலம் ஆனாலும் ஒரு நல்ல நன்னடத்தை உடைய நடிகர்கள் என்ற வரிசையில் தனக்கு முதல் இடத்தை பிடித்துக் கொண்ட பெருமை நடிகர் சிவகுமாருக்கு எப்போது இருக்கும்.இவர் இளைய தலைமுறையும் விரும்பும் நடிகர்களில் ஒருவர்.

இவர் 1956 ஆம் ஆண்டு வெளி வந்த காக்கும் கரங்கள் என்ற திரைப்படத்தின் மூலம் திரையுலகுக்கு அறிமுகமானார். அன்று இவருக்கு கொடுக்கப்பட்ட சம்பளம் ரூபாய் 1000. இதனை அடுத்து இவர் பெருமாள் பெருமை, ராஜராஜ சோழன் ,ஆண் பிள்ளை சிங்கம், பட்டிக்காட்டு ராஜா, அன்னக்கிளி போன்ற படங்களில் கதாநாயகனாக நடித்தார். 

மேலும் இவர் நடிப்பில் வெளிவந்த அன்னக்கிளி, பத்திரகாளி, சிந்துபைரவி, ரோஜா பூ ரவிக்கைக்காரி, வண்டி சக்கரம், ஆட்டுக்கார அலமேலு போன்ற படங்கள் ஹிட் படங்களாக அமைந்து வெள்ளி விழாவை கொண்டாடியது. 
சினிமாத்துறையில் இன்று வரை எந்தவிதமான வதந்திகளிலும் சிக்காத ஒரே நடிகர் யார் என்றால் சிவக்குமார் என்று எளிதில் நாம் கூறிவிடலாம். 

அந்த அளவு மிகச்சிறந்த நன்னடத்தை உடைய நடிகராக திகழ்கிறார். இவர் 1991 ஆம் ஆண்டு கூட குணச்சித்திர வேடங்களில் விக்ரம், சூர்யா,அஜித், விஜய் போன்றவோடு நடித்திருக்கிறார். இதனை அடுத்து சீரியல்களில் நடித்து வந்த இவர் சித்தி, அண்ணாமலை போன்ற சீரியல்களில் நடித்திருக்கிறார். 

ஒரு நாள் சின்னத்திரை சீரியலில் நடித்துக் கொண்டு இருக்கும் போது ஒரு ஷாட்டில் உணர்ச்சி வசமிக்க ஒரு டயலாக்கை பேசிக் கொண்டிருந்தார். அப்போது அதே சீரியலில் நடித்த துணை நடிகை சத்தமாக போன் பேசிக் கொண்டிருந்தார். 

இதனை அடுத்து சிவக்குமார் அது ஷாட்டுக்கு இடையூறாக இருப்பதால் அந்த நடிகையை நோக்கி ஏமா டயலாக் பேசிட்டு இருக்கேன். நீ இப்படி சத்தமா போன்ல பேசுற.. என்று கேட்க, அதற்கு அந்த நடிகை என்ன சார் இப்படி பண்ணறீங்க. இத்தனை வருஷமா நடிச்சுட்டு இருக்கீங்க. எப்படியும் டப்பிங் பேச போறீங்க அப்ப பாத்துக்கலாம் என்று கூறிவிட்டு போன் பேச்சை தொடர்ந்து சத்தமாக பேசி இருக்கிறார்.

அடுத்து அன்றைய சினிமாவில் அவர் பட்ட கஷ்ட நஷ்டங்களையும், இன்றைய சினிமா எப்படி இருக்கிறது இதற்கு மேல் நாம் இதில் நடிக்க வேண்டுமா? என்று யோசித்து தான் திரைப்படத்திலும் சீரியல்களிலும் நடிக்கக்கூடாது என்று அவர் விலகி விட்டதாக சித்ரா லக்ஷ்மணன் கூறியிருக்கிறார். 

தற்போது இந்த செய்தியானது வைரலாக இணையத்தில் பரவி வருகிறது. பலரும் இதை படிப்பதோடு இதனால் தான் இவர் நடிப்பதே இல்லையா? என்ற வகையில் யோசிக்க வைத்துள்ளது.