நேபாள பிரதமர் பேத்திய தமிழ் ஹீரோயினியாக மாத்திய மணிரத்தினம்..! யார் அந்த அழகி தெரியுமா?

 

வித்தியாசமான கதைகளை வித்தியாசமான முறையில் திரையில் காட்டுவதில் கெட்டிக்காரராக இருக்கக்கூடிய இயக்குனர் மணிரத்தினம் பற்றி அதிக அளவு பகிர வேண்டிய அவசியம் இல்லை.இவர் தமிழ் திரை உலகில் ஒப்பற்ற இயக்குனராக திகழ்ந்தவர்களில் இவரும் ஒருவர். 

மணிரத்தினத்தின் இயக்கத்தில் நடித்து விட்டால் அடுத்தடுத்து பட வாய்ப்புகள் வந்து சேருவதோடு திரை உலகில் முன்னணி பிரபலமாக மாறிவிடுவார்கள். அப்படி ஆரம்ப காலத்தில் மணிரத்தினத்தால் தமிழ் திரையுலகில் அறிமுகம் செய்யப்பட்ட இந்த நடிகை நேபாள நாட்டை ஆண்ட பிரதமரின் பேத்தி என்றால் உங்களுக்கு அது ஆச்சரியத்தை ஏற்படுத்தும். 

இந்த நடிகையின் தாத்தா பிஸ்வேஸ்வர் பிரசாத் கொய்ராலா நேபாளத்தின் பிரதமர் என்றால் இவரது அப்பா பிரகாஷ் கொய்ராலா பற்றி சொல்லவா வேண்டும். இவரும் கேபினட் அமைச்சராக பணியாற்றியவர்.

இப்படி சினிமா பின்புலம் இல்லாத, அரசியல் பின்புலத்தைச் சேர்ந்தவரை தான் இவர் தமிழ் திரையுலகுக்கு அறிமுகம் செய்து வைத்தார். அந்த நடிகை வேறு யாரும் இல்லை பம்பாய் திரைப்படத்தில் அறிமுகம் செய்யப்பட்ட மனிஷா கொய்ராலா. 

இந்த படத்தில் நடித்ததற்காக இவருக்கு விருதும் கிடைத்தது. மேலும் படம் படு ஹிட் அடித்து அடுத்தடுத்து வாய்ப்புக்கள் இவருக்கு தேடி வந்தது. அந்த வகையில் இவர் பிரம்மாண்ட இயக்குனர் என்று அழைக்கப்படும் ஷங்கரின் இயக்கத்தில் வெளிவந்த இந்தியன் படத்தில் நடித்து ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார்.

இதனை அடுத்து முதல்வர் படத்தில் நடித்து தான் ஒரு வெற்றி நாயகி என்பதை உறுதி செய்தார். பாலிவுட்டில் கலக்கி வந்த இவரை தமிழுக்கு அறிமுகப்படுத்திய பெருமை இயக்குனர் மணிரத்தினத்தை தான் சாரும். 

சினிமாவில் ஏதேனும் சாதிக்க வேண்டும் என்று நினைத்திருந்த மனிஷா கொய்ராலாவிற்கு பக்க பலமாக இருந்து அவருக்கு நடிப்பினை கற்றுக் கொடுத்து மார்க்கெட்டை எகிற வைத்த ஜாம்பவான் தான் மணிரத்தினம். 

தமிழில் மனிஷா கொய்ராலா நடித்த படங்கள் குறைவாக இருந்தாலும், நடித்த படங்கள் அனைத்துமே சூப்பர் டூப்பர் வெற்றியை அவருக்கு கொடுத்தது. ஒரு காலகட்டத்தில் தமிழக ஆண்கள் அனைவருமே மனிஷாவின் அழகுக்கு அடிமையாகி விட்டார்கள். 

ஒரு காலகட்டத்தில் அழகைக் கூட மனிஷா கொய்ராலா உடன் ஒப்பிட்டே பேசி இருக்கிறார்கள். அது எப்படி எனில் மனசுல மனிஷா கொய்ராலானு நினைப்பு உங்களுக்கு என்று கூறுவதை வழக்கமாகக் கொண்டிருந்தார்கள். அந்த அளவு தமிழக இளைஞர்களின் கனவு கன்னியாக மனிஷா திகழ்ந்திருக்கிறார்.