தென்னிந்திய சினிமாவில் தனக்கு என்று ஒரு தனி இடத்தை ரசிகர்கள் மத்தியில் பெற்றிருக்கும் நடிகை சமந்தா கடைசியாக குஷி என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்த படத்திற்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்தது.
தற்போது நடிகை சமந்தா சிட்டாடல் என்ற படத்தில் நடித்து வருகிறார். மேலும் பல படங்களை கைவசம் வைத்திருப்பது அனைவருக்கும் மிக நன்றாக தெரியும்.
இவர் தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
எனினும் இவர்களுக்கு இடையே ஏற்பட்ட கருத்து வேற்றுமையின் காரணமாக அவரை விட்டு பிரிந்த பின் சினிமாவில் தனது கவனத்தை முழுவதும் செலுத்தி வருகிறார்.
இந்த சூழ்நிலையில் இவர் சமீபத்தில் நடந்த ரியாலிட்டி ஷோவில் நடுவராக பங்கேற்று இருக்கிறார்.
அப்போது அந்த நிகழ்ச்சியில் கிராவிட்டி என்ற ஹிப் ஹாப் பாடகர் ஜலாலுதீன் என்ற பாடலை பாடிய போது சமந்தா கண் கலங்கினார்.
அந்தப் பாடகர் பாடலை பாடப் பாட சமந்தாவின் கண்கள் குளமாகி நீர் வெளியே வர ஆரம்பித்தது.
அட.. இந்த பாடலை கேட்டு ஏன் இப்படி சமந்தா எமோஷனலாக அழுதுவிட்டார் என்ற கேள்விகள் சரமாரியாக எழுந்தது.
இதனை அடுத்து சமந்தா பேசும்போது தான் கொடிய நோயினால் பாதிக்கப்பட்டிருந்த சமயத்தில் இந்த பாடலை அடிக்கடி கேட்டதாகவும், அதற்கு காரணம் இந்த பாடல் இவருக்கு மோட்டிவேஷனை கொடுத்த பாடல் என்று கூறினார்.
எனவே தான் இந்தப் பாடலைக் கேட்டதும் என்னால் கட்டுப்படுத்த முடியாத அளவு உணர்ச்சிகள் மேலோங்கி, கண் கலங்கி அழுதுவிட்டேன் என சமந்தா கூறினார்.
தற்போது இது குறித்த இன்ஸ்டாகிராம் பதிவினை சமந்தா வெளியிட்டு இருக்கிறார்.
இந்த வீடியோவில் அங்கு என்ன நடந்தது என்பதும் சமந்தா கண் கலங்கியதும் வெளி வந்துள்ளது. மேலும் இந்த வீடியோ தான் தற்போது இணையத்தில் ட்ரெண்டிங் ஆன வீடியோவாக மாறியுள்ளது.