மதராசப்பட்டினமே தீவு போல மிக்ஜாம் புயல் புரட்டி போட்ட சூழ்நிலையில் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டு மக்கள் அனைவரும் வீட்டுக்குள்ளேயே முடங்கக்கூடிய சூழ்நிலை ஏற்பட்டது.
மேலும் கடுமையாக கொட்டி தீர்த்த கனமழை காரணமாக வெள்ளம் கரை புரண்டு தெருவெல்லாம் ஆக்கிரமித்து வீடுகளுக்குள்ளும் நீர் புகுந்தது.
இந்த அபரிமிதமான வெள்ளம் உயர்ந்தவர், தாழ்ந்தவர் என்ற பேதம் இல்லாமல் பல சினிமா பிரபலங்களின் வீட்டுக்குள்ளும் புகுந்ததை அடுத்து நிவாரண பொருட்களை கொடுத்து மக்களுக்கு தகுந்த உதவிகளை ஆங்காங்கே செய்து வந்தனர்.
இந்நிலையில் அண்மையில் அசோக் செல்வனை திருமணம் செய்து கொண்ட நடிகை கீர்த்தி பாண்டியன் தனது எக்ஸ் தளத்தில் அதிர்ச்சி தரும் பதிவினை பதிவிட்டு இருக்கிறார்.
இந்த பதிவில் இவர் மயிலாப்பூர் ராதாகிருஷ்ணன் சாலைக்கு அருகில் இருக்கும் விவேகானந்தா கல்லூரி பகுதியில் நிமிடத்திற்கு நிமிடம் தேங்கி இருக்கும் தண்ணீர் சாக்கடை நீரில் கலந்து விட்டதாக கூறினார்.
மேலும் இதை யாரும் சுத்தம் செய்யாத நிலையில் தரைத்தளத்தில் இருக்கும் அனைத்து வீடுகளிலும் தண்ணீர் புகுந்துள்ளது. இந்த தண்ணீரானது கடந்த 2015 -ஆம் ஆண்டு ஏற்பட்ட வெள்ளத்தை விட அதிக அளவு இருப்பதால் நிலைமை படுமோசமாக உள்ளதாக கூறியிருக்கிறார்.
தண்ணீர் அதிகமாக சூழ்ந்து இருக்கக்கூடிய நிலையில் குடிக்க கூட தண்ணீர் இல்லாமல் பலரும் பச்ச தண்ணீரை பல்லில் ஊற்ற வழியில்லாமல் கஷ்டப்பட்டு இருக்கிறார்கள்.
இது மட்டுமல்லாமல் கடந்த 48 மணி நேரங்களுக்கு மேலாக மின்சாரம் எதுவும் இல்லாத நிலையில் என்ன செய்வது என்று தெரியாமல் அந்த பகுதியில் இருக்கும் மக்கள் தவித்து வருவதாக கூறி வீடியோவை பகிர்ந்து அந்தப் பகுதி மக்களுக்கு உதவி செய்ய வேண்டி கீர்த்தி பாண்டியன் கோரிக்கையை விடுத்திருக்கிறார்.
இதனை அடுத்து கீர்த்தி பாண்டியன் போட்ட பதிவை பார்த்துவிட்டு நீர் தேங்கியிருந்த பகுதியை சரி செய்து விட்டதாக பலரும் நன்றி கூறி பதில் பதிவை போட்டு இருக்கிறார்கள்.
எனவே இவரைப் போல இருக்கக்கூடிய பிரபலங்கள் இது போன்ற பொது மக்களுக்கு உதவி செய்யக்கூடிய காரியங்களில் ஈடுபடுவதின் மூலம் துரித முறையில் மக்களுக்கு நிவாரணம் கிடைக்க ஏதுவாக இருக்கும்.
இவரை போலவே விஷால், விஷ்ணு விஷால், சந்தோஷ் நாராயணன் உள்ளிட்ட பல பிரபலங்கள் சமூக வலைத்தளங்களில் இது போன்ற பகிர்வுகளை பகிர்ந்து இருக்கிறார்கள். இதன் மூலம் மக்கள் பலருக்கும் நன்மை ஏற்பட்டுள்ளது.