பாலிவுட் திரை அரங்கில் டாப் நடிகராக இருக்கும் ரன்பீர் கபூர் அண்மையில் நடித்த அனிமல் திரைப்படத்தில் இவருக்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தானா நடித்திருந்தார். மேலும் இந்த படத்தை சந்தீப் ரெட்டி வங்கா இயக்கியிருந்தார்.
இந்தத் திரைப்படம் ரசிகர்களின் மத்தியில் ஒரு மாபெரும் வரவேற்பை தந்ததோடு மட்டுமல்லாமல் பரபரப்பாக பேசப்படும் படங்களில் ஒன்றாக இருந்தது. எனவே இந்த படம் வெளி வந்து உலக அளவில் 600 கோடிக்கு மேல் வசூல் செய்து சாதனை புரிந்துள்ளது.
படத்தில் ரொமான்டிக்கு பஞ்சமே இல்லை என்று கூறக்கூடிய அளவு அத்துமீறிய காட்சிகள் பல இடம் பெற்றுள்ளது. குறிப்பாக ரன்பீர் கபூருடன் படுக்கை அறை காட்சிகளில் உடலில் துணி இல்லாமல் மறைத்தபடி போஸ் தந்து நடித்திருக்கும் நடிகை த்ருப்தி டிம்ரி, எப்படி அது போன்ற காட்சிகளில் நடித்தார் என்று கேட்கக் கூடிய அளவில் ஒவ்வொரு காட்சியும் இருந்தது.
மேலும் இந்த படம் பற்றி இயக்குனர் கூறிய பிறகு ரன்பீர் கபூருடன் இது போன்ற நெருக்கமான காட்சிகளில் நடிக்க வேண்டாம் என தனது பெற்றோர்கள் தன்னிடம் கூறியதாகவும், மேலும் அந்தக் காட்சிகளில் நடிக்க அசௌரியம் இருந்தால் படத்தை விட்டு வெளியே வந்து விடு என்று கூறியதாகவும் தற்போது கூறி பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறார்.
ஆனால் அதையெல்லாம் நான் கேட்காமல் அந்த படத்தில் அது போன்ற காட்சிகளில் நடித்தேன். இதனை அடுத்து எனது பெற்றோர்களுக்கு அதைப் பார்க்கும்போது சற்று அசௌகரியம் ஏற்பட்டதாகவும், அதன் பிறகு அதிலிருந்து அவர்கள் வெளியே வந்து விட்டார்கள் என்ற கருத்தை கூறியிருக்கிறார்.
படத்திற்கு ஒரு நடிகையாக இந்த கதாபாத்திரத்திற்கு எது தேவையோ அதை உணர்ந்து நான் 100% தந்து இருப்பதாக கூறி இருக்கும் அவர் இதைக் கூறி தான் தனது பெற்றோர்களை சமாதானப்படுத்தியதாகவும், அதன் மூலம் அவர்கள் என்னுடைய நிலையை புரிந்து கொண்டார்கள் என த்ருப்தி டிம்ரி உண்மையைத் தெளிவாகக் கூறினார்.
இந்த பதிவு உங்களுக்குப் பிடித்திருந்தால் மறக்காமல் வண்ணத்திரை பக்கத்திற்கு லைக்குகளை போட்டு உங்கள் நண்பர்களுக்கும் ஷேர் செய்து விடுங்கள்.