நடிகை திரிஷாவை அவதூறாக பேசிய மன்சூர் அலிகானால் பல்வேறு விதமான சர்ச்சைகள் கடந்த சில தினங்களாக பரபரப்பாக ஊடகங்களில் செய்திகளாக வெளி வந்தது.
மேலும் மன்சூர் அலிகானின் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்து திரை உலக பிரபலங்கள் மட்டுமல்லாமல் பலரும் இந்த பேச்சுக்கு மன்சூர் அலிகான் திரிஷாவிடம் மன்னிப்பு கேட்டு ஆக வேண்டும் என்ற கோரிக்கையை முன் வைத்தார்கள்.
இது போல பெண்களை தவறாக பேசுபவர்களின் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கருத்து வலுத்த நிலையில் மன்சூர் அலிகான் மீது இரண்டு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது.
இதனை அடுத்து மன்சூர் அலிகான் ஆயிரம் விளக்கு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் ஆஜராகி காவல்துறையினர் நடத்திய விசாரணைக்கு ஒத்துழைப்பு கொடுத்தார்.
மேலும் இவர் திரிஷாவை அப்படி பேசியது தவறு தான் என்று மன்னிப்பு கேட்டு அறிக்கை ஒன்றை வெளியிட்டு இருந்தார்.
இந்த அறிக்கைக்கு பதில் அளித்த திரிஷா தவறு செய்வது மனித இயல்பு மன்னிப்பதே புனிதம் என்று மன்சூர் அலிகானை மன்னித்ததாக தெரிவித்தார்.
இந்நிலையில் நடிகர் மன்சூர் அலிகான் சர்ச்சை விவகாரத்தில் திரிஷா தரப்பிடம் இருந்து விளக்கம் கேட்டு ஆயிரம் விளக்கு மகளிர் காவல் துறை கடிதத்தை அனுப்பியுள்ளது.
இந்த விவகாரம் தொடர்பாக எழுத்துப்பூர்வமான விளக்கத்தை நடிகை திரிஷா அளிக்க வேண்டும் என்று காவல்துறை வலியுறுத்தி இருக்கிறது.
எனவே இதற்கான விளக்கத்தையும் நடிகை திரிஷா விரைவில் எழுத்து பூர்வமாக கொடுத்து மன்சூர் அலிகானை மன்னித்து விடுவார் என்ற கருத்து பரவலாக பேசப்பட்டு வருகிறது.
எனினும் சட்டதிட்டங்கள் கடுமையானால் இது போன்ற பேச்சுக்கள் வருங்காலத்தில் ஏற்படாது என்று பலரும் கருத்துக்களை தெரிவித்து இருக்கிறார்கள்.
இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் வண்ணத் திரை பக்கத்தை லைக் செய்து உங்களது மேலான ஆதரவை கொடுங்கள்.