பிக் பாஸில் அடிக்கடி எஸ்கேப்பாகும் மாயா கமலுக்கு இப்படி உறவா..? - சித்ரா லக்ஷ்மணனின் பதில்..!


விஜய் டிவியில் தற்போது பரபரப்பாக இறுதி கட்டத்தை எட்டியிருக்கும் பிக் பாஸ் 7 பற்றி ரசிகர்கள் மாறி, மாறி பல்வேறு கலவை ரீதியான விமர்சனங்களை ரசிகர்கள் கொடுத்து வருகிறார்கள். 

இதற்கு காரணம் ஒரு கட்டத்துக்கு பிறகு பிக் பாஸ் வீடு ஒரு சந்தை கடை போல காட்சியளிப்பதாக கூறி வரும் வேளையில் இந்த சீசனை பார்த்ததின் மூலம் மன உளைச்சல்தான் அதிகரித்து உள்ளது என்ற குற்றச்சாட்டை முன் வைத்து இருக்கிறார்கள். 

மேலும் இந்த வீட்டில் விளையாடும் போட்டியாளர்கள் விளையாட்டை தெரிந்து விளையாடிகிறார்களா? இல்லை தெரியாதது போல் விளையாடுகிறார்களா? என்று தெரியவில்லை. எதற்காக ஏராளமான கெட்ட வார்த்தைகளை பேச வேண்டும் என்பதை கேள்வியாக கேட்டிருக்கிறார்கள். 

இந்த நிலையில் இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் கமல் குறிப்பிட்ட சில பெயர் மட்டுமே சொல்லும் போது அது மேலும் கடுப்பை ஏற்படுத்துவதாகவும், சமீபகாலமாக இந்த போட்டியில் பங்கேற்கும் மாயாவை எந்த ஒரு நிலையிலும் டச் செய்யாமல் கமல் செல்வது ஏன்? என்ற கேள்வியை பலரும் ட்ரோல் செய்து வருகிறார்கள். 

ஆனால் கமலை பார்த்து மாயா என்றுமே மதித்ததில்லை. அவர் சிரித்தே மளுப்புவதாகத் தான் அனைவருக்கும் எண்ணம் ஏற்படுகிறது. ஒரு வேளை மாயா கமலுக்கு உறவுக்கார பெண்ணாக இருப்பாரோ? என்று கேள்வியை ரசிகர்கள் சிலர் எழுப்பி இருக்கிறார்கள். 

இந்தக் கேள்விக்கு பதில் அளித்த சித்ரா லட்சுமணன் மாயா ஒன்றும் கமலஹாசனுக்கு உறவினர் அல்ல. அப்படி இருந்தாலும் மாயாவை ஆதரித்து கமல் ஒரு போதும் பேச மாட்டார் என்ற கருத்தை முன் மொழிந்து இருக்கிறார். 

இப்போது அவர் கூறிய இந்த பேச்சானது ரசிகர்களின் மத்தியில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் மறக்காமல் வண்ண திரை பக்கத்திற்கு லைக்கை அள்ளிக் கொடுங்கள்.