வணங்கான் திரைப்படம் போல வாடிவாசல் ஊத்திக் கொள்ளுமா..? - விழி பிதுங்கும் வெற்றிமாறன்..!

 

தமிழ் திரை உலகில் வித்தியாசமாக மனிதர்கள் ஒவ்வொருவரும் யோசிக்க வேண்டிய வகையில் திரைப்படங்களை இயக்குவதில் வல்லவராக இருக்கக்கூடிய இயக்குனர் தான் வெற்றிமாறன். 

இவர் பாலு மகேந்திராவின் பட்டறையில் இருந்து வெளிவந்த மாணவர் என்பதால் தான் எதார்த்த நிகழ்வுகளை இயல்பாக பிரதிபலிக்க கூடிய திரைக்கதைகளாக அமைத்து அவற்றை இயக்கி மக்கள் மத்தியில் பெயர் பெற்று விடுகிறார். 

அந்த வகையில் இவரது இயக்கத்தில் வெளி வந்த பொல்லாதவன், ஆடுகளம் போன்ற படங்கள் இவரை புகழின் உச்சிக்கு கொண்டு சென்றுள்ளது. தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு ஹீரோக்களையும் வைத்து இயக்கக்கூடிய அளவு இவரை வளர்த்தியுள்ளது. 

தற்போது இவரது இயக்கத்தில் நகைச்சுவை நடிகர் சூரி மற்றும் விஜய சேதுபதி நடிப்பில் வெளி வந்த விடுதலை திரைப்படம் மக்கள் மத்தியில் பெருத்த வரவேற்பை பெற்றதை அடுத்து இரண்டாம் பாகம் பற்றிய பேச்சு வார்த்தைகள் நடைபெற்று வருகிறது. 

இந்த படத்துக்கு முன்பாகவே சூர்யாவை வைத்து வாடிவாசல் என்ற திரைப்படத்தை இவர் இயக்க இருந்தார். இந்த படம் நீண்ட காலமாக இழுவையில் உள்ளது. ஜல்லிக்கட்டை மையமாகக் கொண்டு இந்த திரைப்படம் எடுக்கப்படுவதால் இதை உண்மை படமாகவே சித்தரிக்க வெற்றிமாறன் திட்டமிட்டு இருக்கிறார். 

அதற்கு ஏற்ப சூர்யாவும் தனியாக காளை மாடுகளை வாங்கி பயிற்சி பெற்று வருகிறார். இந்நிலையில் பருத்திவீரன் பிரச்சனை தொடர்பாக அமீருக்கும் சூர்யாவிற்கும் இடையே பெருத்த விரிசல் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் அமீர் வாடிவாசல் திரைப்படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருக்கிறார். 

இந்த கதாபாத்திரத்தை அமீரை தவிர வேறு யாரையும் நடிக்க வைக்க விருப்பம் இல்லை என்று வெற்றிமாறன் கூறிய நிலையில், தற்போது ஏற்பட்டு இருக்கக்கூடிய பிரச்சனையால் அமீரும் சூர்யாவும் மாடுகளை அடக்கி பட சூட்டிங்கிற்கு உதவி செய்வார்களா என்ற நிலை ஏற்பட்டுள்ளது. 

மேலும் சூர்யா மாடுகளுடன் பழகி பயிற்சி வகுப்பை முடித்துவிட்ட நிலையில் அமீர் அந்த பயிற்சியில் கலந்து கொள்ள சூரியா இன்னும் அனுமதி தராத நிலையில் படம் ஆரம்பிக்கும் முன்பே இவ்வளவு பிரச்சனைகள் என்றால் இந்த படம் வணங்கான் திரைப்படம் போல நின்று விடுமா? என்று அனைவரும் யோசித்து வருகிறார்கள். 

சூழ்நிலை இப்படி இருக்க எப்படி இந்த படத்தை ரிலீஸ் செய்வது என்ற அச்சத்தில் விழி பிதுங்கி வெற்றிமாறன் இருப்பதாக பலரும் பல வகைகளில் செய்திகளை கூறியிருக்கிறார்கள்.