“கார்த்தி தான் இதற்கு காரணம்.!! - பொது இடத்தில் ஓப்பனாய் பேசிய தமன்னா..!

 

தமிழ் சினிமாவில் வாரிசு குடும்பத்தில் பிறந்து வாரிசு நடிகராக நடித்து தற்போது தமிழ் திரையுலகை கலக்கி வரும் நடிகர்களில் ஒருவராக திகழ்பவர் நடிகர் கார்த்தி. இவர் நடித்த பையா திரைப்படம் 2010 ஆம் ஆண்டு வெளிவந்தது.

இந்த திரைப்படத்தை லிங்குசாமி இயக்க இவருக்கு ஜோடியாக தமன்னா நடித்திருந்தார். மேலும் இந்த படத்தில் தமன்னா, கார்த்தியை காதலிப்பது போல காட்சிகள் அமைக்கப்பட்டு இருந்தது. மேலும் இவர்கள் இருவரும் இந்த படத்தில் மிக நன்றாக நடித்திருந்தார்கள். இவர்களது கெமிஸ்ட்ரி பலராலும் பேசப்படும் ஒன்றாக மாறியிருந்தது. 

இந்நிலையில் தமன்னாவும், கார்த்தியும் காதலித்து வருவதாகவும் அந்த காதலுக்கு அவரது அப்பா சிவக்குமார் எதிர்ப்பு தெரிவித்ததால் இவர்கள் இருவரும் பிரிந்து விட்டார்கள் என்ற செய்தி இன்று வரை கிசுகிசுக்கப்பட்டு வருகிறது. 

எனினும் இவர்கள் இருவரும் தங்களது கேரியரில் அதிக கவனத்தோடு நடித்து தங்களுக்கு உரிய இடத்தை பிடித்துக் கொண்டு இருக்கிறார்கள். அந்த வகையில் தமன்னா சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஓட இணைந்து நடித்த ஜெய்லர் திரைப்படத்தில் காவாலா என்ற ஒரு பாடலுக்கு ஆடிய ஆட்டத்தை இன்னும் தமிழக இளைஞர்கள் மறக்கவில்லை. 

என்றுமே தமிழக இளைஞர்களின் மில்க் பியூட்டியாக திகழும் இவருக்கு மேலும் பல தமிழ் பட வாய்ப்புகள் வந்து சேர வேண்டும் என ரசிகர்கள் விரும்புகிறார்கள். இந்த சூழ்நிலையில் கார்த்தியின் நடிப்பில் வெளி வந்த அவரது 25 வது திரைப்படமான ஜப்பான் திரைப்பட விழாவில் நடிகை தமன்னா கலந்து கொண்டார். 

மேலும் இந்த விழாவில் அவர் பேசும் போது கார்த்தியால் தான் நான் நன்றாக தமிழ் பேச கற்றுக் கொண்டேன். நான் எத்தனை படங்களில் நடித்தாலும் இன்று வரை அடையாளமாக இருப்பது பையா திரைப்படம் இதற்காக நான் கார்த்திகிடம் நன்றி தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன் என்று கூறினார். 

தற்போது இவர் கூறிய இந்த கருத்து ரசிகர்களின் மத்தியில் பரவலாக பேசப்பட்டு வருவதோடு இவர்கள் இடையே இருந்தது நட்பா? காதலா? என்று மீண்டும் பட்டிமன்றம் நடத்த ஆரம்பித்து விட்டார்கள்.