தென்னிந்திய திரை உலகின் லேடிஸ் சூப்பர் ஸ்டார் என்று அனைவரும் அன்போடு அழைக்கப்படும் நயந்தாரா கேரளத்துப் பெண் என்றாலும் தென்னிந்திய அளவில் இவருக்கு ரசிகர்கள் வட்டாரம் அதிக அளவு உள்ளது.
இவர் திரைத்துறையில் நடிக்கும் போது பலவிதமான கிசுகிசுகளுக்கு ஆளான நிலையில் விக்னேஷ் சிவனை ஆறு ஆண்டுகள் காதலித்து திருமணம் செய்து கொண்டார். திருமணம் ஆன பிறகு வெறும் நான்கே மாதத்தில் வாடகை தாயின் மூலம் இரண்டு குழந்தைகளுக்கு தாயானார் நயன்.
தற்போது தன் குழந்தைகள் மற்றும் கணவரோடு சந்தோஷமாக குடும்பம் நடத்தி வரும் நயந்தாரா அவ்வப்போது தன் கணவர் மற்றும் குழந்தைகளோடு இருக்கும் புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டு மகிழ்ச்சியை பங்கிட்டு கொள்ளுவார்.
மேலும் ஒரு பக்கம் நடிப்பு, மற்றொரு பக்கம் தயாரிப்பு என திரையுலகில் கலக்கி வரும் இவர் பல நிறுவனங்களில் முதலீடு செய்து மிகச்சிறந்த தொழில் அதிபராகவும் உயர்ந்துவிட்டார்.
பாலிவுட் படங்களிலும் தனது முத்திரையை பதித்திருக்கும் நயன்தாரா அடுத்தடுத்து தமிழ் படங்களில் நடிப்பதற்கு தயார் ஆகியிருக்கிறார். இந்நிலையில் இவரின் பிறந்த நாள் கடந்த நவம்பர் 18ஆம் தேதி அன்று கொண்டாடப்பட்டது.
இந்த இனிய பிறந்த நாளுக்காக விக்னேஷ் சிவன் தன் மனைவிக்கு காஸ்ட்லி கார் ஒன்றை பரிசளித்து உள்ளதாக சமூக வலைத்தளங்களில் புகைப்படங்கள் வெளிவந்துள்ளது.
அதுவும் எவ்வளவு விலை என்று கூறினால் நீங்கள் அசந்து போவீர்கள்.
அவ்வளவு விலை மதிப்பு உள்ள மெர்சிடிஸ் மே பேக் நிறுவனத்தின் விலை உயர்ந்த காரை பரிசளித்திருக்கிறார். இந்த காரின் விலை சுமார் 2.69 கோடி முதல் 3.40 கோடி வரை இருக்கலாம் என சொல்லப்படுகிறது.
நயன்தாராவும் தன் கணவனிடம் இருந்து இந்த காரை பரிசாக பெற்றது மூலம் மிகுந்த மகிழ்ச்சியில் இருப்பதாக சொல்லப்படுகிறது. இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் வண்ணத்திரை பக்கத்திற்கு லைக்குகளை அள்ளிக் கொடுங்கள்.