இந்திய திரை உலகில் லேடிஸ் சூப்பர் ஸ்டார் என்று ரசிகர்களால் ஆராதனை செய்யப்படும் நயன்தாராக்கு ரசிகர்கள் அதிக அளவு காணப்படுகிறார்கள்.
அண்மையில் ஜவான் திரைப்படத்தின் மூலம் பாலிவுட் திரையுலகில் காலடி எடுத்து வைத்திருக்கும் நயன்தாரா அங்கும் தனது ஆட்சியை ஆரம்பித்து விட்டார் என கூறக்கூடிய அளவிற்கு ஜவான் படம் ஹிட் அடித்து உள்ளது.
மேலும் அண்மையில் இவர் நடிப்பில் வெளி வந்த அன்னபூரணி திரைப்படம் மக்கள் மத்தியில் மட்டுமல்லாமல் ரசிகர்களின் மனதையும் கவரக்கூடிய விதத்தில் அமைந்துள்ளது. இந்த படத்தில் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி விட்டார்.
இதனை அடுத்து இவர் புதிதாக ஒரு படத்தில் நடிக்க உள்ளதாக தகவல்கள் கசிந்து உள்ளது. அதுவும் இந்த படத்தை இவரது காதல் கணவர் விக்னேஷ் சிவன் இயக்க இயக்கிறார்.
எனவே இந்த படத்தில் ஒரு முக்கிய ரோலில் இவர் நடிக்க இருக்கிறார்.
அதுவும் ஒரு சென்சேஷனலான ஹீரோவாக திகழக்கூடிய நடிகருக்கு அக்காவாக நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.
மேலும் இந்த படத்தை லியோ படத்தை தயாரித்த லலித் குமார் தான் தயாரிக்க உள்ளதாகவும், சுமார் Rs.60 கோடி பட்ஜெட்டில் இந்த படம் உருவாகும் என கூறுகிறார்கள்.
அது மட்டும் அல்லாமல் இந்த படத்துக்கு LIC-லவ் இன்சூரன்ஸ் கம்பெனி என்ற தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.
இப்போது உங்களுக்கு அந்த சென்சேஷனான ஹீரோ யார்? என்று யோசித்துக் கொண்டிருப்பீர்கள். இவர் வேறு யாரும் இல்லை லவ் டுடே படத்தில் நடித்து ஹிட் கொடுத்த பிரதீப் ரங்கநாதன்.
இந்த இளம் நடிகருக்கு பாலிவுட் நடிகையை ஜோடியாக போட பேச்சுவார்த்தைகள் நடந்து கொண்டு இருக்கிறது.
இந்த சூழ்நிலையில் தான் பிரதீப்பின் அக்காவாக நடிக்க நயன்தாரா கமிட் செய்துள்ளதாக தகவல்கள் வெளிவந்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதனை அடுத்து இந்த படத்தின் அதிகாரப்பூர்வமான அறிவிப்பு எப்போது வெளிவரும் என்பதை நாம் பொறுத்திருந்து பார்ப்போம்.