விஜய் டிவியில் நிகழும் பிரம்மாண்டமான ரியாலிட்டி ஷோவான பிக் பாஸ் நிகழ்ச்சி தற்போது விறுவிறுப்பாக இறுதி கட்டத்தை எட்டி உள்ளது என கூறலாம். இந்த சீசனில் தொகுப்பாளராக இருக்கும் கமலஹாசன் பிக் பாஸ் ஆரம்பித்த நாள் முதல் இன்று வரை தொகுப்பாளர் பதவியை திறம்பட செய்திருந்தார்.
2017 ஆம் ஆண்டு துவங்கப்பட்ட இந்த நிகழ்ச்சி மாபெரும் வெற்றி பெற்றதற்கு காரணம் கமலஹாசன் என்று கூட சொல்லலாம். இவர் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் விதம், மக்களின் குரலாக போட்டியாளர்களிடம் கலந்து உரையாடுவது, தவறை தட்டி கேட்பது என அனைத்தையும் அட்டகாசமாக செய்து வந்தார்.
ஆனாலும் முந்தைய சீசனைப் போல் இல்லாமல் இந்த ஏழாவது சீசனில் கமலஹாசனை பற்றி கடுமையான விமர்சனங்கள் எழுந்துள்ளது. மேலும் பிரதீப்புக்கு ரெட் கார்ட் கொடுத்து வெளியேறிய முதல் வாரமே நிக்ஸன் நிஷா விவகாரத்தை கண்டு கொள்ளாமல் கமல் சென்றதின் காரணத்தால் பிரச்சனைகள் பெரிய அளவில் வெடித்தது.
இதனால் கமல் இன்று வரை சேர்த்து வைத்த பெயர் அத்தனையும் டேமேஜ் செய்து விட்டால் என்று கூறக்கூடிய வகையில் சோசியல் மீடியாவில் நெட்டிசன்ங்கள் கமலை வறுத்து எடுத்து வருகிறார்கள்.
அது மட்டுமல்லாமல் சாதாரணமாக ஒரு போட்டியில் நடக்கும் தப்பை தட்டிக் கேட்க முடியாத உங்களால் அரசியல் வாழ்க்கைக்குள் நுழைந்து நடக்கின்ற தவறுகளை எப்படி தட்டி கேட்பீர்கள், என்ற ரீதியில் குரலை உசத்தி கேள்விகளை முன் வைத்திருக்கிறார்கள்.
இந்தக் கேள்விகளுக்கு தக்க பதிலடி கொடுக்க கமலஹாசன் முடிவு செய்துள்ள நிலையில், இவர் விரைவில் இந்த சோவில் இருந்து விலகி விடுவார் என கூறப்படுகிறது. மேலும் பிக்பாஸில் இருந்து விலகிய இவர் அரசியலில் முழு கவனத்தையும் செலுத்த திட்டமிட்டுள்ளதாக கருத்துக்கள் வெளிவந்துள்ளது.
அப்படி ஒருவேளை கமலஹாசன் பிக்பாஸ் வீட்டை விட்டு விலகிச் சென்று விட்டால் அவருக்கு பதிலாக லிட்டில் சூப்பர் ஸ்டார் சிம்புவை களம் இறக்க கோரிக்கைகள் வலுத்து உள்ளதாக தெரியவந்துள்ளது. எனவே விரைவில் பிக் பாஸ் சீசன் 8 நடத்துவது கமலா? இல்லை சிம்புவா? என்பது தெரியவரும்.