தண்ணீரில் குழந்தைகளோடு தத்தளிக்கும் நடிகை நமீதா..!! - அதுவும் 6 அடி உயரத்தில் வெள்ளம்..!

 

சென்னையில் கடந்த சில நாட்களாகவே மிக்ஜாம் புயல் சென்னை வாசிகளின் இயல்பு வாழ்க்கையை புரட்டிப் போட்டு விட்டது என கூறலாம். சென்னையே ஒரு தீவு காடாக எங்கு பார்த்தாலும் வெள்ளம் என்று சொல்லக்கூடிய நிலையில் மக்கள் பலரும் மழை தண்ணீரால் சிரமப்பட்டு வருகிறார்கள். 

இதனை அடுத்து தற்போது கொஞ்சம், கொஞ்சமாக மழை குறைந்து வெள்ளம் தேங்கிய பகுதிகளில் நீர் வடிய ஆரம்பித்து விட்டது. எனினும் சில பகுதிகளில் தண்ணீர் இன்னும் அப்படியே இருப்பதால் மீட்பு குழுவினரை தாண்டி பல மக்களும் உதவிகளில் ஈடுபட்டு வருகிறார்கள். 

இந்த நிலையில் மிக்ஜாம் புயலால் பெய்த அதிக அளவு மழை நீரானது பள்ளிக்கரணை, நாராயணபுரம் ஏரியை உடைத்து நீரை வெளியேற்றியது. அந்த நீரானது தற்போது நடிகை நமிதாவின் வீட்டுக்குள் புகுந்து உள்ளதாக செய்திகள் வந்துள்ளது. 

தமிழ் திரைப்படங்களில் கவர்ச்சியை அதிகம் காட்டி நடித்த இவர் பேசிய மச்சான் என்ற வார்த்தை இன்னும் ரசிகர்களின் மனதில் அப்படியே உள்ளது. அந்த அளவு தனக்கு என்று ஒரு ரசிகர் பட்டாளத்தை வைத்திருக்கும் நமிதா பற்றி அதிக அளவு கூற வேண்டிய அவசியமே இல்லை. 

இப்போது அந்த நமிதாவின் வீட்டுக்குள் மழை நீர் சென்று விட்டதின் காரணமாக அவர் தன்னுடைய குழந்தைகளோடு திணறி வருவதாகவும் இன்னும் அங்கு மீட்பு குழுவினர் செல்லவில்லை என்று சொல்லப்படுகிறது. 

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் மறக்காமல் வண்ணத்திரை பக்கத்திற்கு உங்களது மேலான ஆதரவை கொடுத்து உங்களது நண்பர்களுக்கும் ஷேர் செய்யுங்கள்.