45 வயதில் மங்காத இளமை.. கவர்ச்சி உடையில் அசத்தும் ஜோதிகா! - வைரல் போட்டோஸ்..!

 

அனுபமா சோப்ராவின் ரவுண்டு டேபிள் நிகழ்ச்சிகள் கலந்து கொள்ள நடிகை ஜோதிகா சென்று இருக்கிறார். அங்கு எடுக்கப்பட்ட போட்டோஸ் தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. இந்த போட்டோஸை ஜோதிகா ரசிகர்கள் திரும்பத் திரும்ப பார்த்து தெறிக்கவிட்டு விட்டார்கள் எனக் கூறலாம். 

அந்த அளவு அழகில் 45 வயதா? இல்லை 18 வயதா? என்று கேட்கக் கூடிய அளவு இவரது மேனி அழகு மேருகேறி எவர்கிரீன் நடிகையாக காட்சியளிக்கிறார். 1990-களில் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக இருந்தவர் விஜய், அஜித், சூர்யா, மாதவன், விக்ரம் என பல முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து தனது அபார நடிப்புத் திறனால் அதிக அளவு ரசிகர்களை பெற்றிருக்கிறார். 


இவர் அஜித்தோடு வாலி படத்தில் ஒரு சிறு காட்சிகளில் நடித்திருந்தாலும், இன்னும் அந்த காட்சிகள் ரசிகர்களின் மனதில் உள்ளது. அந்த வகையில் இவர் ஒட்டுமொத்த ரசிகைகளையும் கவர்ந்தவர் என கூறலாம். 

90களில் இளைஞர்களின் கனவு கன்னியாக வலம் வந்த ஜோதிகா தன்னோடு நடித்த சக நடிகரான சூர்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டு தமிழ்நாட்டின் மருமகளாக மாறிவிட்டார். 


பிறகு சில காலம் திரையுலகை விட்டு விலகி இருந்த இவர் குழந்தைகள் பெரிதான உடனே 36 வயதினிலே என்ற திரைப்படத்தின் மூலம் ரீஎண்ட்ரி கொடுத்து அசத்தினார். இதனை அடுத்து நாச்சியார், ஜாக்பாட் உள்ளிட்ட பல படங்களில் நடிப்பதோடு மலையாள திரைப்படத்தில் மம்முட்டியோடும் இணைந்து நடித்து இருக்கிறார். 

தற்போது மும்பையில் செட்டிலாக இருக்கும் இவர் கருப்பு கோட்டோடு முன் அழகை எடுப்பாக காட்டியிருக்கும் புகைப்படங்களை வெளியிட்டு ஒரு க்யூட்டான லுக்கில் ஜொலிக்கிறார் என்று கூறலாம்.