ஏறக்குறைய தமிழ் சினிமா உலகில் மட்டுமல்லாமல் தென்னிந்திய சினிமாவில் 40 ஆண்டுகளுக்கும் மேலாக நிலைத்து நின்று இளமை மாறாத நடிகையாக திகழும் நடிகை ரம்யா கிருஷ்ணன் நீலாம்பரி முதல் சிவகாமி தேவி வரை பல அற்புதமான கேரக்டர்களை செய்தவர்.
இவர் நடிப்பில் அம்மன் கேரக்டராக இருந்தாலும் சரி, குத்தாட்டம் போடும் கவர்ச்சி நாயகியாக இருந்தாலும் சரி, நடிப்பை சீறிய முறையில் வெளிப்படுத்தி அசத்துவதில் இவருக்கு நிகர் எவரும் இல்லை என கூறலாம்.
அந்த அளவு இவர் நடிப்பில் வல்லவர்.
இன்று இவர் சினிமாவில் நிலைத்து இருக்க என்ன காரணம் என்று தெரியுமா?. அதைப் பற்றிய விரிவான தகவல்களை இன்றைய பதிவில் நாம் காணலாம்.
ஒரு இயக்குனர் நடிகைகளை அணுகி கதை கூறினால் இந்த கதாபாத்திரத்தில் நான் நடிக்க மாட்டேன்.
அப்படிப்பட்ட காட்சிகள் வேண்டாம். அப்படி, இப்படி எல்லாம் எனக்கு நடிக்க தெரியாது. என்னால் நடிக்க முடியாது என்றெல்லாம் கூறும் நடிகைகள் திரையுலகில் நிலைத்து நிற்க முடியாது.
மேலும் இயக்குனர் ஒருவர் ஒரு கதாபாத்திரத்தை உருவாக்கி அதை நீங்கள் நடித்தால் நன்றாக இருக்கும் என்று நினைத்துச் சொன்னால் அதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும்.
அதுமட்டுமல்லாமல் அவரின் நோக்கம் தவறாக இருந்தால் நடிகைகள் மறுக்கலாம். இதை தவிர கதைக்குத் தேவையான பட்சத்தில் அதற்கு உரிய ஆதரவை தருவது ஒவ்வொரு நடிகைகளின் கடமை. அதை மறுக்கக்கூடாது என ரம்யா கிருஷ்ணன் கூறி இருக்கிறார்.
மேலும் நடிக்க மாட்டேன் என்று கூற உங்களுக்கு பல காரணங்கள் இருக்கலாம். அப்படி நீங்கள் மறுக்கும்போது அடுத்த படத்தில் அந்த இயக்குனர் உங்களைப் பற்றி யோசிக்கக்கூட மாட்டார் என்பதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும்.
உதாரணமாக நான் சூப்பர் டீலக்ஸ் என்ற படத்தில் நடித்திருந்தேன்.
அந்த படத்தை பார்த்து என் மகனே அவன் வாயால் மோசமான வார்த்தைகளை சொல்லி என்னை திட்டுகிறான். ஆனால் அந்த கதாபாத்திரத்தின் தாக்கம் இன்று வரை நிலைத்து நிற்கிறது. இதற்கு காரணம் இயக்குனர் தான் அவர் கேட்டதைத்தான் நான் அந்த படத்தில் நடித்துக் கொடுத்திருந்தேன்.
இன்று 50 வயதை கடந்து விட்டால் கூட என்னால் இன்றும் திரையுலகில் சிறப்பாக நடிக்க முடிகிறது என்றால் அதற்குக் காரணம் 40 ஆண்டு காலமாக நான் சினிமாவில் பயணம் செய்ய வலுவான கேரக்டர் ரோல்களை அமைத்துக் கொடுத்த இயக்குனர்கள் மற்றும் எனது ரசிகர்கள் தான் என்று தனது அனுபவத்தை மிக நேர்த்தியான முறையில் பகிர்ந்து இருக்கிறார்.