சின்னத்திரையில் இருந்து வெள்ளி திரைக்கு சென்ற நடிகைகளை விரல் விட்டு எண்ணி விடலாம். அந்த வகையில் வாணி போஜன் சின்னத்திரையில் இருந்து வெள்ளி திரைக்கு சென்று தற்போது மிகப்பெரிய அளவில் வெற்றி அடைந்திருக்கிறார்.
இவரைப் போலவே பிரியா பவானி சங்கரும், சின்னத்திரையில் இருந்து பெரிய திரைக்கு சென்று யாரும் எதிர்பார்க்காத வகையில் முன்னணி நாயகியாக வளர்ந்து வருகிறார்.
தற்போது இவரின் கைவசம் ஏகப்பட்ட படங்கள் உள்ள நிலையில் தெலுங்கில் இவர் நாக சைதன்யா உடன் இணைந்து வெப் சீரியலில் நடித்து மிகப்பெரிய வரவேற்பை பெற்றுவிட்டார்.
இந்த சூழ்நிலையில் இவரை குறித்து சில முக்கிய தகவல்களை பயில்வான் ரங்கநாதன் பேசி கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி ரசிகர்களின் மத்தியில் ஏற்படுத்தி விட்டார்.
எப்போதுமே நடிகைகளின் அந்தரங்கத்தை பேசி அதன் மூலம் பணம் பண்ணும் பயில்வான் என்று பலரும் கூறினாலும், இவர் தற்போது பிரியா பவானி சங்கரையும் விட்டு வைக்கவில்லை.
குறுகிய காலத்தில் இவர் எப்படி முன்னணி நடிகையாக மாறினார் என்பதை குறித்து பல விஷயங்களை கூறினார்.
இவரின் இந்த அசுர வேக வளர்ச்சிக்கு காரணம் மிகப் பிரபலமான பைனான்சியர் ஒருவர் தான்.இவர் பிரியா பவானி சங்கர் என்ன சொன்னாலும் அந்த பைனான்சியர் பூம், பூம் மாடு போல தலையாட்டி செய்து விடுவாராம்.
அந்த அளவுக்கு இவர்களுக்குள் நெருக்கம் இருப்பதாக கிசுகிசுக்கள் வந்துள்ளது.
மேலும் வெறும் முப்பது லட்சம் ரூபாய் சம்பளம் வாங்கும் போது எப்படி பிரியா பவானி சங்கரால் ஈஸிஆரில் சொகுசு பங்களா, காஸ்ட்லி கார் என எல்லாம் வாங்க முடிந்தது என்ற கேள்வியை கேட்டதோடு மட்டுமல்லாமல் இந்த பைனான்சியர் கூறினால் உடனே அவரது கால்ஷீட் கிடைத்துவிடும் என்ற குண்டையும் போட்டு இருக்கிறார்.
இந்த வதந்தி எந்த அளவுக்கு உண்மை என்று தெரியாது. எனினும் தற்போது திரைத்துறை வட்டாரங்களில் இந்த பேச்சு பரவலாக பேசப்பட்டு வருகிறது. இதனை அடுத்து இணையத்தில் வைரலான செய்தியாக இந்த செய்தி மாறிவிட்டது