தமிழ் சினிமாவில் முன்னணி கதாநாயகியாக வலம் வந்த ஜோதிகா.இவரை ஓவர் எக்ஸ்பிரஷன் மூலம் ரசிகர்களை கவர்ந்தவர் என்று கூறலாம். இவர் தமிழ் திரையுலகில் அஜித், விஜய், சூர்யா, ரஜினி, கமல் என அனைத்து முன்னணி நடிகர்களுடனும் ஜோடி போட்டு நடித்திருக்கிறார்.
இவர் தான் செய்யக்கூடிய கதாபாத்திரங்களை மிக நேர்த்தியான முறையில் தேர்ந்தெடுத்து நடித்ததன் மூலம் பெண் ரசிகர்களிடம் அதிக அளவு ஆதரவை பெற்றார். இதை அடுத்து நடிகர் சூர்யாவை திருமணம் செய்து கொண்டு சினிமாவில் தலை காட்டாமல் இருந்தார்.
மேலும் இவர் திருமணத்திற்கு பிறகு 36 வயதினிலே என்ற திரைப்படத்தின் மூலம் தனது இரண்டாவது இன்னிங்ஸை ஆரம்பித்தார். இதை அடுத்து காற்றின் மொழி, ராட்சசி, மகளிர் மட்டும் போன்ற பெண்களுக்கு முக்கியத்துவம் தரும் படங்களில் சவாலான கேரக்டரில் நடித்தார்.
அண்மையில் இவர் மலையாள நடிகர் மம்மிட்டியோடு இணைந்து நடித்த காதல் தி கோர் திரைப்படம் வெளி வந்து ரசிகர்களின் மத்தியில் பெருத்த ஆதரவை பெற்றது. இது ஜோதிகாவின் முதல் மலையாள திரைப்படம் ஆகும்.
இதனை அடுத்து தமிழில் அதிக அளவு பட வாய்ப்புகள் வருகிறது.
எனினும் அந்த படங்களில் ஒன்று இரண்டு சீன்களில் நடிக்க கூடிய கேரக்டர்கள் மட்டும் உள்ளதாகவும், பல இயக்குனர்கள் தன்னிடம் அணுகி ரெண்டு சீன் தான் மேடம் நடித்துக் கொடுங்கள் என்று கேட்பதாக கூறியிருக்கிறார்.
இந்த நிலையை தான் மரியாதை குறைவாக நினைப்பதை எப்படி வந்த இயக்குனரிடம் கூறுவது என்று தெரியாமல் முழிப்பதாகவும் சொல்லியிருக்க கூடிய அவர் சின்ன ரோலாக இருந்தாலும், அந்த ரோலுக்கு என்று ஒரு மதிப்பு இருக்க வேண்டும் என்பதை தெரிவித்திருக்கிறார்.
இவர் தன்னுடைய 25 வருட சினிமா கேரியரில் இது போன்ற அனுபவத்தை தற்போது அனுபவித்து விட்டதாக கூறியிருக்கிறார்.