கடைசி இடத்திற்கு தள்ளப்பட்ட தல அஜித்..! - 2024-ல் முன்னேறுவாரா?..

 

தமிழ் சினிமாவை பொறுத்த வரை தல அஜித் என்று சொன்னாலே ரசிகர் வட்டாரத்தை அதிகமாக வைத்திருப்பவர். இவர் எந்த விதமான சினிமா பின்புலமும் இல்லாமல் இவராகவே தன்னுடைய கடுமையான உழைப்பின் மூலம் உச்சகட்ட நட்சத்திர அந்தஸ்தை அடைந்தவர். 

இவரது சீரியஸ் நடிப்பை வாலி திரைப்படத்தில் அனைவரும் பார்த்து இருக்க முடியும். மிகச்சிறந்த மனிதரான இவர் அமர்க்களம் திரைப்படத்தில் நடித்ததின் மூலம் நடிகை ஷாலினியை காதலித்து திருமணம் செய்து கொண்டார். 

இவர் கோலிவுட் நடிகர்களின் வரிசையில் ரஜினிக்கு அடுத்த நிலையில் இருந்தார். அதுவும் மங்காத்தா, ஆரம்பம் போன்ற திரைப்படங்களில் அவர் நடித்துக் கொண்டிருந்த போது இந்த இடம் இவருக்கு கிடைத்தது. ஆனால் தற்போது நிலைமையே தலை கீழாக மாறிவிட்டது. 

இந்த இடத்தை இவர் விட்டுக் கொடுத்து விட்டார் என்றே கூறலாம். இதற்கு காரணம் சினிமாவில் ஏதோ கடமைக்கு படம் செய்கிறேன் என்பது போல சுவாரஸ்யம் இல்லாத திரைக்கதைகளை தேர்வு செய்து நடித்ததின் காரணத்தால் ரசிகர்கள் இவர் மேல் வெறுப்போடு இருக்கிறார்கள். 

இந்த நிலையில் 2023 வது வருடம் google தளத்தில் அதிகம் பேர் தேடிப்பார்த்த பிரபலங்களில் முதலாவது இடத்தில் தளபதி விஜய் இருக்க, இவருக்கு அடுத்த நிலையை சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பிடித்திருக்கிறார். 

இவரை அடுத்து தனுஷ், சூர்யா அடுத்தடுத்த இடங்களில் இருக்க ஐந்தாவது இடத்திற்கு தள்ளப்பட்டு இருக்கும் அஜீத் இனியாவது சுதாரித்துக் கொண்டு சிறந்த திரைப்படங்களில் நடிப்பாரா? என ரசிகர்கள் கேட்டு வருகிறார்கள். 

கட்டாயம் இதை உணர்ந்து கொண்டு அஜீத் இனி வரும் காலகட்டங்களில் முதல் இடத்திற்கு முன்னேறுவார் என்பதில் எந்த சந்தேகமும் வேண்டாம். இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் மறக்காமல் வண்ணத்திரை பக்கத்திற்கு லைக்குகளை அள்ளிக் கொடுத்து உங்கள் நண்பர்களுக்கும் ஷேர் செய்யுங்கள்.