ராஜ்வேலு 2-வது தான்.. அவருக்கு முன்பே இவரை காதலித்தேன்!! கூச்சம் இல்லாமல் சொன்ன பிரியா பவானி சங்கர்..!

 

சின்னத்திரையில் இருந்து வெள்ளி திரைக்கு சென்று அங்கு வெற்றி கொடியை நட்டு இருக்கக்கூடிய நடிகைகளில் ஒருவராக பிரியா பவானி சங்கர் ஆரம்ப நாட்களில் தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராக அறிமுகமாக பின்னர், சின்னத்திரை சீரியல்களில் நடிக்கும் பிஸியான நடிகையாக திகழ்ந்தார். 

ஆரம்ப காலத்தில் இவர் விஜய் டிவியில் நடித்து ஒளிபரப்பான கல்யாண முதல் காதல் வரை என்ற சீரியல் ரசிகர்களின் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இவருக்கு ஒரு சிறந்த அறிமுகத்தையும் தந்தது. இதனை அடுத்து வெள்ளி திரையில் களம் கண்ட இவர் மேயாத மான் என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். 

மேலும் இவர் கடைக்குட்டி சிங்கம் என்ற திரைப்படத்தில் மிகச்சிறந்த ரோலில் நடித்து ரசிகர்களின் எண்ணிக்கையை அதிகம் ஆக்கிக் கொண்டார். தற்போது பல திரைப்படங்களை கைவசம் வைத்துக்கொண்டு அதில் நடித்த வரும் பிரியா பவானி சங்கர் தன்னுடைய நீண்ட நாள் நண்பர் ராஜ்வேல் என்பவரை காதலித்து வருவது உங்கள் அனைவருக்கும் மிக நன்றாக தெரியும். 

நேரம் கிடைக்கும் போது அவரோடு அவுட்டிங் சென்று ரொமான்டிக்கான புகைப்படங்களை வெளியிடுவார். இந்நிலையில் பிரியா பவானி சங்கர் ராஜ்வேலை காதலிக்கும் முன்பே மற்றொருவரை காதலித்ததாக அவரை கூறி இருப்பது கடுமையான அதிர்வலைகளை ரசிகர்களின் மத்தியில் ஏற்படுத்தி உள்ளது. 

இது குறித்து பிரியா பவானி சங்கர் ஒரு பேட்டியில் தான் ஓரு மோசமான ரிலேஷன்ஷிப்பில் இருந்ததாகவும், அவனை நல்லவன் என்று நினைத்து நேசித்தேன். எனினும் அவன் குணம் தெரிந்த பிறகு அவனிடம் இருந்து நான் விலகி விட்டேன் என்ற கருத்தை தெரிவித்திருக்கிறார். 

அப்படி விலக்குவதற்கு முன்பு என்னுள் பலவிதமான எண்ணங்கள் ஓடியது. இருந்தாலும் இனி முடிவெடுக்காமல் இருந்தால் தவறாகிவிடும் என ஒரு கட்டத்தில் நான் பிரேக்கப் செய்து விட்டேன் என தெளிவாக கூறியிருக்கிறார். 

இதனை அடுத்து தான் ராஜவேலுடன் காதல் இருந்து வருவதாக எமோஷனலாக அந்த விஷயம் பற்றி தெளிவாக கூறியிருப்பது, ரசிகர்களின் மத்தியில் பரபரப்பாக பேசப்பட்டு இணையத்தில் வைரலாகும் செய்திகளில் ஒன்றாக மாறிவிட்டது.