அடுத்த முதலமைச்சர் 100% அஜித் தான்..! - சொன்னது யாரு தெரியுமா..?

 



சினிமாவில் எந்த விதமான பின்புலமும் இல்லாமல் தனது உண்மையான உழைப்பாலும், அர்ப்பணிப்பு தன்மையாலும் உச்சகட்ட நட்சத்திரம் என்ற அந்தஸ்தை பெற்றவர் அஜித். 

இவர் ஆரம்ப காலத்தில் திரை உலகில் தன்னை நிலை நிறுத்த பட்ட கஷ்டங்கள் ஒன்று, இரண்டு இல்லை. அத்தனையும் தாக்குப்பிடித்து வாலி திரைப்படத்தின் மூலம் தனது அற்புத நடிப்புத் திறனை வெளிப்படுத்தி மக்கள் மத்தியில் தல அஜித் என்ற பெயரை பெற்று விட்டார்.

மேலும் இவர் நடிப்பில் வெளிவந்த அவள் வருவாளா, ஆனந்த பூங்காற்றே போன்ற படங்கள் இவருக்கு நல்ல பெயரை பெற்று கொடுத்ததோடு மக்கள் மத்தியில் பெருத்த ஆதரவையும் தந்தது. 

அந்த வகையில் அஜித் நடித்த அவள் வருவாளா திரைப்படத்தை இயக்கிய ராஜ் கபூர் தற்போது கூறி இருக்கும் கருத்தானது தமிழக மக்கள் மத்தியில் பரவலாக பேசப்பட்டு வருகிறது. யாருமே நினைத்துப் பார்க்க முடியாத கருத்தினை ராஜ்கபூர் தெரிவித்திருக்கிறார். 

அதாவது தமிழகத்தின் முதலமைச்சராக கூடிய 100 சதவீதமான தகுதி தல அஜித்துக்கு உள்ளது என கூறியிருக்கிறார். இவர் என்ன இப்படி பேசி இருக்கிறார். 

அஜித் அரசியலுக்கு வர எந்த விதமான சுவடும் இல்லை. அதற்கான விதையும் அவர் போடாத நிலையில் இப்படிப்பட்ட கருத்தை வெளியிட்டு இருக்கிறாரே என்று மக்கள் அனைவரும் யோசித்து வருகிறார்கள். 

அதற்கு அவர் ஒரு வேளை அரசியலில் அஜித் கவனத்தை செலுத்தினால் கட்டாயம் அடுத்த சிஎம் இவர் தான் என அடித்துக் கூறுகிறார். இதற்கு காரணம் அஜித்தின் ஜாதகம் அந்த மாதிரி என்ற கருத்தையும் தெரிவித்துவிட்டார். 

ஓரு சமயம் வருங்காலத்தில் அஜித் அரசியலுக்கு வரக்கூடிய வாய்ப்பு இருந்தால் அவர் சிஎம் ஆவதை எவராலும் தடுக்க முடியாது என்று ராஜ்கபூர் திட்டவட்டமாக பேசியிருக்கிறார். 

ஆனால் ரசிகர்கள் பலரும் அஜித் சிஎம் ஆவதற்கு வாய்ப்பே இல்லை. ஏனெனில் சென்னை தற்போது புயலால் பாதிக்கப்பட்ட நிலையில் அவர் வடநாட்டைச் சேர்ந்த ஒரு நடிகருக்கு உதவி செய்தாரே தவிர தன்னை வாழ வைத்த சென்னை மக்களுக்கு எந்த ஒரு உதவியும் செய்யவில்லை. 

இப்படி இருக்கக்கூடிய சூழ்நிலையில் நீங்கள் தல அஜித்தை எப்படி சிஎம் ஆவார் என்று கூறுகிறீர்கள் என்று சரமாரியாக நெட்டிசன்கள் பதிலடி தந்திருக்கிறார்கள்.