எவ்வளவு தான் தொழில்நுட்பம் வளர்ந்து நாகரீகத்தின் உச்சத்தில் இருந்தாலும், பெண்களுக்கு எதிராக நடக்கும் வன்கொடுமைகளுக்கு அளவே இல்லை என்று கூறும் அளவிற்கு புதுப்புது யுத்திகளை கையாண்டு பெண்களை வன்கொடுமைகளுக்கு உள்ளாக்கி வருகிறார்கள்.
அந்த வகையில் அண்மையில் வெளி வந்த தளபதி விஜயின் லியோ படத்தில் நடித்த நான்கு பிரபலங்கள் #MeToo சர்ச்சையில் சிக்கி மிகப்பெரிய பரபரப்பை இணையத்தில் ஏற்படுத்தி விட்டார்கள்.
அதிலும் சோசியல் மீடியாக்களில் மன்சூர் அலிகான் பற்றிய சர்ச்சை தான் தற்போது கடுமையான அதிர்வலைகளை ஏற்படுத்தி இருக்கிறது.
இவர்களை ஏன் தன் படத்தில் நடிக்க வைத்தோம் என்று இயக்குனர் லோகேஷ் நொந்து போகும் அளவுக்கு இந்த பிரச்சனை வைரலாகி விட்டது.
இதற்குக் காரணம் மன்சூர் அலிகான், திரிஷா பற்றிய முகம் சுளிக்கக்கூடிய கருத்தை சொல்லி இருப்பதைப் பார்த்து திரை உலக பிரபலங்கள் பலர் அதற்கு கடுமையான எதிர்ப்புகளை தெரிவித்து வருகிறார்கள்.
மன்சூர் அலிகான் குணம் தெரிந்தும் லோகேஷ் எதற்காக லியோ படத்தில் இவருக்கு நடிக்க வாய்ப்பினை கொடுத்தார் என்ற கேள்வியை அனைவரும் தற்போது முன் வைத்து இருக்கிறார்கள்.
இந்த சர்ச்சையானது மன்சூர் அலிகானோடு நின்று விடவில்லை.
இந்த படத்தில் நடித்த ஆக்சன் கிங் அர்ஜுன் மீதும் மீடூ புகார் வைக்கப்பட்டிருந்தது. இவர் மீது இந்த புகாரை கொடுத்தவர் நிபுணன் படத்தில் ஹீரோயினியாக நடித்த ஸ்ருதி ஹரிஹரன்.
மேலும் இதை ஒட்டி நடந்த விசாரணையில் இதற்கான போதிய ஆதாரம் இல்லை என்பதால் அர்ஜுன் விடுவிக்கப்பட்டார்.
அதுமட்டுமல்லாமல் ஏற்கனவே தன் குற்றச்சாட்டை மறுத்த அர்ஜுன் அவர் மீது மான நஷ்ட வழக்கு தொடர்ந்தது உங்களுக்கு நினைவில் இருக்கலாம்.
இவரை அடுத்து லியோவில் ஒரு சிறு கேரக்டர் ரோலில் நடித்த பாலிவுட் பிரபலமான அனுராக் காஷ்யப் மீதும் இத்தகைய மீடூ புகார் எழுந்தது .
இவர் மீது புகார் கொடுத்தவர் நடிகை பாயல் கோஷ். இவர் குற்றச்சாட்டை முன் வைத்ததோடு மட்டுமல்லாமல் அவரை கடுமையாக தண்டிக்க வேண்டும் என்று கூறியிருக்கிறார். இதனை அடுத்து இந்த குற்றச்சாட்டை அனுராக் திட்டவட்டமாக மறுத்தார்.
அதுமட்டுமல்லாமல் விக்ரம் படத்தில் நடித்த மாயா பற்றிய பகீர் தகவல்கள் அண்மைக்காலமாக சோசியல் மீடியாவில் தீயாய் பரவிய வேளையில் நடிகை அனன்யாவும், பாடகி சுசித்ராவும் மாயாவை பற்றி அருவருக்கத்தக்க பல்வேறு கருத்துக்களை கூறி இருக்கிறார்கள்.
இப்படி அடுக்கடுக்காக மீ டூ புகார் சிக்கி இருக்கும் நபர்களை லோகேஷ் கனகராஜ் படத்தில் நடித்தவர்கள் என்ற கோணத்தில் ரசிகர்களால் பார்க்கப்பட்டு, பரபரப்பாக பேசக்கூடிய பொருளாக மாறிவிட்டது.
இப்படிப்பட்ட தன்மை கொண்டவர்களை எதற்கு இவர் தன் படத்தில் நடிக்க வைத்திருக்கிறார் என்ற கேள்வியும் தற்போது எழுந்துள்ளது.
எனினும் லோகேஷ் கனகராஜ் தன்னுடைய கண்டனத்தை வலுவான வார்த்தைகளால் தெரிவித்திருப்பது வரவேற்கத்தக்க விஷயமாக உள்ளது.