தமிழ் திரை உலகில் 2018 ஆம் ஆண்டு கார்த்தி நடிப்பில் வெளி வந்த கடைக்குட்டி சிங்கம் என்ற திரைப்படம் மக்கள் மத்தியில் பெருமளவு பேசப்பட்டு எதிர்பாராத வெற்றியை காட்சிக்கு பெற்று தந்தது.
இந்த படத்தில் நடிகர் கார்த்திக்கு அக்கா கதாபாத்திரத்தை செய்த நடிகை ஜீவிதா அண்மை பேட்டி ஒன்று திரையுலகில் நடக்கும் அட்ஜஸ்ட்மென்ட்களை பற்றி பேசி இருக்கிறார்.
இந்த பேச்சில் இயக்குனர் ஒருவர் தன் படத்தில் ஹீரோயினியாக நடிக்கும் வாய்ப்பு இருக்கிறது என்று தன்னை அழைத்ததாகவும் அதே சமயத்தில் அவரிடம் அட்ஜஸ்ட்மென்ட் செய்ய வேண்டும் என்று கூறியதாகவும் கூறியிருக்கிறார்.
மேலும் எதில் எல்லாம் அட்ஜஸ்ட்மென்ட் செய்ய வேண்டும் என்பதை தெளிவாக கேட்பாராம் அந்த வகையில் ஆடையில் செய்ய வேண்டுமா? சீனில் செய்ய வேண்டுமா? நெருக்கமாக நடிக்க வேண்டுமா? என்று கேட்டேன்.
அதற்கு அவர் இல்லை.. முதலில் நான் ரூமுக்கு வருவேன்.. பிறகு கேமராமேன் அதனை அடுத்து தயாரிப்பாளர்.. பிறகு ஹீரோ என்றார்.
என்ன இது ஒரு தமிழச்சியிடம் இப்படியெல்லாம் கேட்பது முறையா? என்று நினைக்கத் தோன்றுவதோடு அழுகை தானாக வந்துவிடும். அவர் முன் அழுதால் தோற்றுவிடுவோம் எனவே கண்ணுக்குள்ளேயே நீரை அப்படியே வைத்துக் கொள்ள வேண்டும்.
அதுமட்டுமல்லாமல் ஒரு பெண்ணாக இருந்தாலே போதும் என்று அவர்கள் ஓப்பனாக கூறி இருப்பதாக நடிகை ஜீவிதா தெரிவித்திருக்கிறார். ஒரு படத்தின் நடிக்கச் சென்ற போது என்னிடம் 40 ஆயிரம் ரூபாய் சம்பளம் என்று கூறினார்கள்.
அதற்கு படுக்கையில் பகிர வேண்டும் என்பதை வேண்டுகோளாக விடுத்தார்கள். அதெல்லாம் முடியாது என்றால் வெறும் பத்தாயிரம் தான் சம்பளம் இஷ்டம் இருந்தால் நடிக்கலாம் என்று தெரிவித்தார்கள்.
மானத்தை விட்டு பிழைப்பதை விட பத்தாயிரம் சம்பளமே போதுமானதாக என்று கூறி ஜீவிதா அந்தப் படத்தில் நடித்ததாக ரகசியத்தை உடைத்து தெரிவித்தார்.