சில நாட்களுக்கு முன்பாக தான் ராஷ்மிகா லிப்டுக்குள் இருந்து உள்ளே வரும்போது டிஎஃப் செய்யப்பட்ட வீடியோவில் அரை நிர்வாண கோலத்தில் காட்சி அளித்து பரபரப்பை ஏற்படுத்தியதோடு மட்டுமல்லாமல் கடுமையான கண்டனங்களுக்கும் இது போன்ற செயல்களுக்கு கடுமையாக சட்டங்கள் கொண்டுவர வேண்டும் என்று பிரபலங்கள் கூறி இருந்தார்கள்.
அந்த சுவடு அழிவதற்கு முன்னதாகவே தற்போது நடிகை கத்ரீனா கைஃபின் போலி வீடியோ வெளியாகி வைரலாக மாறிவிட்டது. இதற்குக் காரணம் தொழில்நுட்ப வளர்ச்சி என்று கூறலாம்.
இந்த அபரிவிதமான தொழில்நுட்ப வளர்ச்சியால் புதுப்புது கண்டுபிடிப்புகள் நமக்கு பன்மடங்கு ஆபத்தை தொடர்ந்து அதிகரித்து வண்ணமே உள்ளது.
தற்போது மிகவும் ட்ரெண்டிங்காக இருக்கக்கூடிய செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் AI, இது போன்ற புகைப்படம் மற்றும் வீடியோவை மாஃபிங் செய்து உண்மையான உருவங்களாக நம்முன் தோன்றிட செய்ய முடியும்.
அதுமட்டுமல்ல இந்த தொழில்நுட்பத்தின் மூலம் ஒருவரின் குரலை தங்களின் தேவைக்கு ஏற்ப மாற்றி பயன்படுத்திக் கொள்ள முடியும்.
அந்த வகையில் தான் தமிழ் பாடல்களை நமது பாரதப் பிரதமர் குரல் மாற்றி அதை Instagram-ல் பதிவிட்டு வைரல் ஆக்கினார்கள்.
இதில் ஒரு முக்கியமான விஷயத்தை நீங்கள் கவனிக்க வேண்டும்.
இன்ஸ்டாவில் பதிவிட்ட அந்த பாடல்கள் மிகச்சிறந்த பின்னணி பாடல்களுக்கு டாப் கொடுக்கக் கூடிய வகையில் தரமாக மோடிஜி பாடியது போல இருந்ததற்கு காரணம் இந்த தொழில்நுட்பம் தான்.
அதே போலத் தான் தற்போது ராஷ்மிகாவை அடுத்து கத்ரீனா கைஃபின் வீடியோ சர்ச்சையில் சிக்கி இருக்கிறது. இவர் நடித்த டைகர் 3 படத்தில் டவல் அணிந்து ஒரு சீனில் நடித்திருப்பார். அந்த சீனை தான் தற்போது செயற்கை தொழில்நுட்பத்தைக் கொண்டு ஆபாசமாக சித்தரித்து இணையத்தில் பரப்பிவிட்டு இருக்கிறார்கள்.
ஏற்கனவே பிரபலங்களிடமிருந்து இது போன்ற வீடியோக்களுக்கு கண்டணங்கள் எழுந்த நிலையில் தற்போது இதுபோன்ற சம்பவங்களை செய்து போலியான வீடியோக்களை வெளியிட்டால் மூன்று ஆண்டுகள் கடும் சிறை தண்டனை விதிக்கப்படும் என்ற எச்சரிக்கை வந்துள்ளது.
எனவே இனிமேலாவது இதுபோன்ற ட்ரெண்டிங் ஆன வீடியோக்களை வெளியிட்டு தவறுகளை செய்ய வேண்டாம் என்று எச்சரிக்கை விடப்பட்டுள்ளது என கூறலாம்.
இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உடனடியாக உங்கள் நண்பர்களுக்கு எந்தப் பக்கத்தை ஷேர் செய்துவிட்டு, வண்ணத்திரை பக்கத்திற்கு உங்கள் மேலான ஆதரவை அளிப்பதோடு லைக் மற்றும் கமெண்ட்களை கொடுங்கள்.