"DD-யை கட்டிப்பிடித்து சொந்த செலவில் சூனியம் வைத்துக் கொண்ட விஜய்..!" - கொந்தளிக்கும் சங்கீதா..!

 

தமிழ்நாட்டில் சின்ன குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை தளபதி விஜய் அண்ணாவின் திரைப்படங்களை மட்டுமல்லாமல் அவரது நடனத்தையும் ரசித்து அவர் மேல் பாசத்தோடு இருந்து வருகிறார்கள். 

இந்நிலையில் தளபதி விஜய் நடிப்பில் கடந்த மாதம் திரைக்கு வந்த திரைப்படம் லியோ. இந்தப் படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கி இருந்தார். மேலும் இந்த படத்தில் திரிஷா, மிஸ்கின், கௌதம் மேனன், பிரியா ஆனந்த், மடோனா செபாஸ்டியன், பிக் பாஸ் ஜனனி போன்ற மிகப் பெரிய நட்சத்திர பட்டாளம் நடித்திருந்தது. 

சூட்டிங் தொடங்குவதற்கு முன்பே படத்திற்கான ரிலீஸ் தேதியை சொல்லி அந்த தேதியிலேயே படத்தை ரிலீஸ் செய்து அசத்தியது படக்குழு. இந்த படத்தை பற்றி கலவை ரீதியான விமர்சனங்கள் எழுந்தது.

மேலும் இந்த படம் வெளிவந்த பிறகு உலக அளவில் பல்வேறு இடங்களில் பல்வேறு வகைகளில் வசூல் செய்து சாதனையை நிகழ்த்தியுள்ளது. குறிப்பாக 10 நாளில் 540 கோடியை வசூல் செய்துள்ளதாக பட குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. 

இதனை அடுத்து கடந்த ஒன்றாம் தேதி இப்படத்தின் வெற்றி விழா மிகவும் பிரம்மாண்ட முறையில் நடைபெற்றது. இந்த விழாவில் நடிகர் விஜய் பேசிய வசனங்கள் ரசிகர்கள் மத்தியில் பேசும் பொருள் ஆனது. 

இந்த விழாவில் தான் தொகுப்பாளினியாக இருந்த டிடியை விஜய் மேடைக்கு வந்த உடனே கட்டிப்பிடித்து தனது அன்பை வெளிப்படுத்தி இருக்கிறார். இது குறித்த வீடியோவை டிடி தற்போது சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு இருக்கிறார். 


மேலும் இந்த வீடியோவானது தற்போது வைரலாக பரவி வருவதோடு மிகப்பெரிய வைப்பாக மாறிவிட்டது என்று கூறலாம். எல்லோரிடமும் சமமாக அன்பு காட்டும் விஜயின் செயல்பாடுகள் பாராட்டுக்கு உரியது என்று பலரும் பல்வேறு கருத்துக்களை தெரிவித்து இருக்கிறார்கள். 

சில ரசிகர்கள் ஏற்கனவே லிப்லாக்கில் திரிஷா உடன் இருந்ததை பார்த்து அண்ணிக்கு பிடிக்கலை, மீண்டும் நீங்கள் இதுபோன்று செய்வதால் குடும்பத்தில் பிரச்சனை ஏற்பட்டுவிடும் வேண்டாம் அண்ணா என்று நக்கலாக கூறியிருக்கிறார்கள். 

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உடனே வண்ணத்திரை பக்கத்திற்கு லைக்குகளை கொடுங்கள். உங்கள் நண்பர்களுக்கும் ஷேர் செய்யுங்கள்.