தனுஷ் கேங்கில் அமுல் பேபினா.. இது தான் அர்த்தம்.. ச்சீ..நாக்கு கூசுது..! - பாடகி சுசித்ரா சொன்ன Code மீனிங்..!

 


தமிழ் சினிமாவில் பின்னணி பாடகியாகவும், டப்பிங் ஆர்டிஸ்ட் ஆகவும் விளங்கும் பாடகி சுசித்ரா தற்போது பிக் பாஸ் சீசன் 7ல் பேசப்பட்ட அமுல் பேபி என்ற வார்த்தைக்கு உண்மையான அர்த்தம் இது தான் என்பதை சொல்லி பல்வேறு சர்ச்சைகளை ஏற்படுத்தி இருக்கிறார். 

இவர் 20 ஆண்டுகளுக்கும் மேலாக திரைப்பட பாடகையாக திகழ்ந்திருக்கிறார். பல தமிழ் படங்களுக்கு டப்பிங் பேசியவர். சென்னையில் பிறந்து வளர்ந்த இவர் ஆரம்ப காலத்தில் பண்பலை வர்ணனையாளராக திகழ்ந்திருக்கிறார். 

இதனை அடுத்து பிரபல நடிகர் கார்த்திக் குமாரை 2005 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். 12 ஆண்டுகளுக்குப் பிறகு இவர்களுக்கு இடையே ஏற்பட்ட கருத்து வேற்றுமையின் காரணமாக விவாகரத்து பெற்று பிரிந்து விட்டார். 

மேலும் இவர் பிரபல தமிழ் நடிகர் தனுஷ், இசை அமைப்பாளர் அனிருத் மற்றும் சஞ்சிதா செட்டி உள்ளிட்ட பல சினிமா பிரபலங்களின் அந்தரங்க வீடியோக்களை "சுச்சி லீக்ஸ்" என்ற தலைப்பில் பதிவிட்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்தினார். 

பாடகி சுசித்ரா பிக் பாஸ் சீசன் 4 போட்டியாளராக பங்கேற்றவர். இதனை அடுத்து தற்போது நடக்கும் பிக் பாஸ் நிகழ்ச்சிகள் குறித்து இவர் பேசி வருகிறார். அந்த வகையில் பிரதீப்புக்கு ரெட் கார்ட் கொடுக்கப்பட்டு வெளியேற முழு காரணம் மாயா தான் என்று கூறி வருகிறார். 

மாயாவை ஒரு லெஸ்பியாக சித்தரித்து விட்டதோடு, சகப் போட்டியாளர் பூர்ணிமாவை மாயா தன் ஆசை வலையில் வீழ்த்த முயல்வதாக சில குற்றச்சாட்டுகளை வைத்திருக்கிறார். அதுமட்டுமல்லாமல் பிக் பாஸ் சீசனில் தற்போது தினேஷ் மற்றும் விஷ்ணு ஆகிய இருவரும் கடுமையான போட்டியில் இருக்கிறார்கள். 

இந்த நிலையில் நரியென தினேஷ், விஷ்ணு அழைக்க விஷ்ணுவை பதிலுக்கு அவர் அமுல் பேபி என்று கூறியது கோபத்தை ஏற்படுத்தி உள்ளது. அட.. அமுல் பேபி என்று கூறியதற்காக இவ்வளவு கோபம் என்று நீங்கள் நினைக்கலாம். 

ஆனால் விஷ்ணுவை தினேஷ் இப்படி அழைத்ததற்கு அவர் கோபப்பட காரணம் என்னவென்று தெரியுமா? தனுஷ் மற்றும் அவருடைய கேங்கை சேர்ந்தவர்கள் அமுல் பேபி என்ற வார்த்தைக்கு ஒரு தனி அர்த்தம் வைத்திருக்கிறார்கள் என்று பாடகி சுசித்ரா கூறி இருப்பது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

அவர் வெளியிட்ட தகவலின் படி "வெள்ளை நிற பம்" என்பது தான் அதன் அர்த்தமாம் இந்தக் கோடிங் அவருக்குத் தெரிந்ததால் தான் கோபப்பட்டு இருக்கிறார் என சுசித்ரா சர்ச்சையை கிளப்பிவிட்டார்.