தமிழில் முன்னணி கதாநாயகியாக விரைவில் வருவார் என்று எதிர்பார்க்கப்பட்ட அமலா பால், மைனா திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகுக்கு அறிமுகமானார் இதனை அடுத்து இவரது நடிப்பை பார்த்து அசந்த அனைவரும் இவரது ஃபாலோயிர்களாகவும், பேனாகவும் மாறினார்கள்.
மேலும் தமிழில் முன்னணி நடிகர்களோடு நடித்த இவர் ஏ எல் விஜய் என்ற தமிழ் இயக்குனரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இதனை அடுத்து இருவருக்கும் கருத்து வேற்றுமை ஏற்பட்டு விவாகரத்து வரை சென்று தற்போது பிரிந்து வாழ்ந்து வருகிறார்கள்.
தமிழ் மொழியில் இவர் ஆடை என்ற திரைப்படத்தில் முற்றிலும் மாறுபட்ட கதாபாத்திரத்தை ஏற்று நடித்ததின் மூலம் பாராட்டுதல்களை பெற்றிருக்கிறார். சமூக வலைத்தளங்களில் எப்போதும் பிஸியாக இருக்கக்கூடிய புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பதிவேற்றுவதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார்.
இதனை அடுத்து இவர் தனது காதலர் ஜகத் தேசாயின் போட்டோவை ஷேர் செய்து தான் இரண்டாவது திருமணத்திற்கு தயாராகி விட்டதை சூசகமாக உணர்த்தினார். இதனை அடுத்து இவர்கள் இருவரும் நவம்பர் 5ஆம் தேதி பிரமாண்டமான முறையில் திருமணம் செய்து கொண்டார்கள்.
இந்த சூழ்நிலையில் நடிகை அமலாபால் தான் கடந்து வந்த வாழ்க்கை பாதையில் ஏற்பட்ட ரணங்களை பற்றி கோடாங்கி youtube சேனலுக்கு பேட்டி ஒன்றை அளித்திருக்கிறார்.
இந்த பேட்டியில் அவர் அனுபவித்த வலிகளை மிக நேர்த்தியாக வெளியிட்டு இருப்பதோடு மட்டுமல்லாமல், நடிகையின் வாழ்க்கையில் எவ்வளவு பெரிய சோகமா? என்று கேட்கக் கூடிய அளவு இந்த பேட்டி இருந்தது என்று கூறலாம்.
நடிகை அமலா பாலுடன் நட்புடனும், பாசத்தோடும் நிறைய நண்பர்கள் பழகி வருகிறார்கள். இவரும் அதுபோலவே நட்போடு பழகி வருகிறார். ஆனால் தான் உருகி உருகி காதலித்து திருமணம் செய்து கொண்ட இயக்குனர் திருமணத்திற்கு பிறகு அவரது திருமண வாழ்க்கையில் சுதந்திரத்தை தரவில்லை என்றும் பல தவறுகளை சுட்டிக்காட்டி தன்னை டார்ச்சர் செய்ததாக கூறினார்.
இதனை அடுத்துத்தான் இந்த வாழ்க்கை சரிவராது என்று தான் முதல் கணவரை விட்டு பிரிந்து வந்து தற்போது இரண்டாவது முறையாக காதலித்து இரண்டாவது திருமணம் செய்து கொண்டிருக்கிறேன் என்ற தனது வலிகளை பகிர்ந்து இருக்கிறார்.
மேலும் தான் எல்லோரையும் எளிதில் நம்பி விடக்கூடிய கேரக்டர் என்பதால் தான் நான் மிக விரைவில் ஏமாந்து போகிறேன். ஆடை படத்தில் நடிக்கும் போது கூட இந்த படத்தில் நீங்கள் நடித்தால் உங்கள் நிலை முன்னணிக்கு சென்று விடும் என்று ஆசை வார்த்தை கூறினார்கள்.
அந்த வார்த்தைகளை நம்பித்தான் அந்தப் படத்தில் நடித்தேன். எனினும் எனக்கு ஏமாற்றம் தான் மிஞ்சியது என்று கடந்த கால வாழ்வில் ஏற்பட்ட துயரங்களையும் தான் விரும்பி காதலித்தவர்களே தனக்கு துரோகம் செய்ததையும் அமலாபால் உடைத்துவிட்டார்.