சமூக வலைதளங்களின் மூலம் பிரபலமாகி சின்னத்திரை சீரியல் நடிகையாக மாறியவர் நடிகை தர்ஷா குப்தா. ஆரம்ப நாட்களில் இவர் முள்ளும் மலரும், மின்னலே போன்ற சீரியலில் நடிக்க ஆரம்பித்தார். இதன் மூலம் இல்லத்தரசிகளின் உள்ளத்தில் இடம் பிடித்தார்.
தர்ஷா குப்தா செந்தூரப்பூவே என்ற சீரியலில் வில்லியாக நடிக்க ஆரம்பித்ததை அடுத்து அனைவரும் விரும்பும் சீரியல் நாயகிகளில் ஒருவராக மாறிவிட்டார். அந்தளவு வில்லி கேரக்டரை பக்காவாக செய்திருப்பார்.
இதனை அடுத்து இவர் குக் வித் கோமாளி சீசன் இரண்டில் போட்டியாளராக கலந்து கொண்டார்.
இந்த போட்டியில் தனது திறமைகளை வெகுவாக வெளிப்படுத்திய பின்பு இவருக்கு சினிமாவில் நடிக்கக்கூடிய வாய்ப்புகள் வந்து சேர்ந்தது.
அந்த வகையில் வெள்ளித்திரையில் ருத்ர தாண்டவம் என்ற படத்தில் நடிகர் ரிச்சாட் ரிச்சுக்கு ஜோடியாக நடித்து அனைவரது பாராட்டுகளையும் பெற்றார்.
இதனை அடுத்து ஓ மை கோஸ்ட், மெடிக்கல் மிராக்கிள் போன்ற படங்களில் நடித்திருக்கிறார்.
இந்த சூழ்நிலையில் சமூக வலைத்தளங்களில் படு பிஸியாக இருக்கக்கூடிய இவர் இணையத்தில் தற்போது படு கவர்ச்சியாக போஸ் கொடுத்திருக்கும் புகைப்படங்களை ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டு ரசிகர்களை மிரள வைத்து விட்டார்.
இந்த புகைப்படத்தில் மார்பு பகுதியில் குத்தி இருக்கக்கூடிய டாட்டூ அப்படியே தெரியும் படி ஆடையை அணிந்து கவர்ச்சி போஸ் தந்திருக்கிறார். இந்தப் புகைப்படத்தை தான் அனைவரும் தொடர்ந்து பார்த்து வருகிறார்கள்.
அதுமட்டுமல்லாமல் இந்த புகைப்படத்தில் நமக்கு நாம் தான் துணை என்பதை ஒரு கட்டத்தில் உணர்ந்து கொள்கிறோம். இது தான் வாழ்க்கை என்று கூறி இருப்பதை பலரும் பல்வேறு வகையில் விமர்சனம் செய்து வருகிறார்கள்.
மேலும் இணையத்தில் தற்போது ட்ரெண்டிங் ஆன புகைப்படமாக இது மாறி உள்ளது என்று கூறலாம்.