இப்படித்தான் நயன்தாரா.. விக்கி-யை மடக்கினாரா? - விஷயம் தெரிந்தால் ஆச்சரியப்படுவீங்க..!

 

விக்கி நயன்தாராவை சந்தித்த முதல் சந்திப்பிலேயே அது நிகழ்ந்துவிட்டது என்று சொன்னால் நீங்கள் ஆச்சரியப்படுவீர்கள். ஆம் முதல் சந்திப்பில் விக்னேஷ் சிவனை ஃபிளாட் ஆகிய நயன் என்ன செய்தார் தெரியுமா?. அந்த சுவாரசியமான பதிவை தான் இந்த பதிவில் நீங்கள் காண போகிறீர்கள்.

நானும் ரௌடி தான் படத்தை விக்னேஷ் சிவன் இயக்கிய போது அந்தப் படத்தில் கதாநாயகியாக நயன் நடித்திருந்தார் அப்போதுதான் இவர்கள் இருவருக்கும் இடையே காதல் அரும்பியது. மேலும் பல ஆண்டுகளாக காதலித்து வந்த இவர்கள் லிவிங் டுகதர் முறைகளும் வாழ்ந்திருக்கிறார்கள்.

இதனை அடுத்து இருவரது பிறந்தநாளை கொண்டாடுவது புது வருடத்தை கழிக்க வெளிநாடுகளுக்கு செல்வது என்று அடிக்கடி வெளிநாடுகளுக்குச் சென்று டேட்டிங்கில் இருந்தார்கள். இதனை அடுத்து ஊடகம் ஒன்றில் பேட்டி அளித்த விக்னேஷ் சிவன் நானும் ரவுடிதான் பட உருவானபோது நயனை சந்தித்த சில அனுபவங்களை தற்போது பகிர்ந்து கொண்டிருக்கிறார்.

அந்த வகையில் நயன்தாராவை சந்திக்க முக்கிய காரணமாக இருந்தவர் தனுஷ் சார் தான் என்று இவர் கூறுகிறார். படத்தின் தயாரிப்பாளரான தனுஷ் நயன்தாராவிற்கு கதை சொல்ல என்னை அனுப்பி இருந்தால் நானும் நயன்தாராவின் வீட்டுக்கு போனதும் அவர் என்னை உட்கார வைத்துவிட்டு முதலில் செல்போனை ஆப் செய்தார்.

அவர் செல்போனை ஆப் செய்வதை பார்த்த உடனேயே எனக்குள் ஒரு நம்பிக்கை பிறந்தது. ஏனெனில் பெரும்பாலான நடிகைகள் முதல் சந்திப்பில் இதை செய்ய மாட்டார்கள் எனவே எனக்கு அந்த நிமிடம் நயன்தாராவை அப்படி பிடித்துப் போனது. 

மேலும் படம் உருவாகி வரும் வேளையில் எனக்கும் அவருக்கும் சின்ன சின்ன சண்டைகள் வந்துள்ளது. எனினும் இருவரும் இடையே நல்ல புரிதல் ஏற்பட அதுவே பாலமாய் அமர்ந்தது. இதனை அடுத்து தான் எங்களுக்குள் காதல் துளிர்த்தது என பேட்டியில் தெரிவித்திருக்கிறார். 

இதனை அடுத்து முதல் சந்திப்பிலேயே தன்னை ஈர்த்துவிட்ட நயன்தாராவை திருமணம் செய்து கொண்டு தற்போது இரண்டு குழந்தைகளுக்கு அப்பாவான நிலையில் தான் கடந்து வந்த காதலித்த பாதையை ஒரு முறை மீண்டும் திரும்பிப் பார்த்து அதை அழகாக ரசிகர்கள் மத்தியில் பகிர்ந்து கொண்டதை நினைத்து ரசிகர்கள் அவரை பாராட்டி வருகிறார்கள். 

திரைப்படத்தில் நடிக்கும் போது பல்வேறு கிசுகிசுகளுக்கு உள்ளான நயன்தாரா கடைசியாக விக்னேஷ் சிவனை காதலித்து திருமணம் செய்து கொண்டு தற்போது இரண்டு குழந்தைகளுக்கு தாயான நிலையில் மீண்டும் திரைப்படத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.