விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் மூலம் மக்களிடையே மிகப் பெரிய வரவேற்பை பெற்ற நபர்களில் ஷிவாங்கி இவரது அற்புத குரலாலும், வெகுளித்தனமான பேச்சாளும் பெருவாரியான ரசிகர்கள் இவருக்கு ஆதரவு தந்தார்கள்.
இந்த நிகழ்ச்சியில் இவருக்கு கிடைத்த ஆதரவை பயன்படுத்தி அடுத்ததாக குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் பங்கேற்றார். அங்கு இவரது நகைச்சுவை திறமை பெரிய அளவில் வெளிப்பட்டு மக்கள் மனதில் நீங்காத இடம் கிடைத்தது.
மேலும் இவரது திறமைக்கு பரிசாக வெள்ளி திரையில் பாட்டு பாட வாய்ப்புகள் கிடைத்ததோடு மட்டுமல்லாமல் நடிக்கவும் வாய்ப்புகள் வந்து சேர்ந்தது. இதனை அடுத்து சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளிவந்த டான் திரைப்படத்தில் நடித்து மக்களை உற்சாகப்படுத்தினார்.
இந்நிலையில் எப்போது பிரபல இசையமைப்பாளரான வித்யாசாகர் மகன் ஹஷ்வர்த்துடன் மிக நெருக்கமாக இருக்கக்கூடிய புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டு அது வைரலாக மாறிவிட்டது.
இதனை அடுத்து இருவருக்குள்ளும் காதல் இருக்குமா? என்பது போன்ற சந்தேகத்தின் அடிப்படையில் கமெண்ட் செய்து வருகிறார்கள். ஏற்கனவே இவர்கள் இருவரும் ஒன்றாக சேர்ந்து பாடிய பாடல் ரசிகர்களின் மனதில் நிலைத்து இருப்பது போல இவர்கள் காதலும் இருக்க வேண்டும் என்று பல ரசிகர்கள் எதிர்பார்க்கிறார்கள்.
இதற்கான விடையை இருவரில் ஒருவர் தெரிவித்தால் மிகவும் நன்றாக இருக்கும் என்றபடி எதிர்பார்த்து ரசிகர்கள் காத்திருக்கிறார்கள்.
இந்தப்பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் வண்ணத்திரை பக்கத்திற்கு உங்கள் மேலான ஆதரவை கொடுங்கள் உங்கள் நண்பர்களுக்கும் ஷேர் செய்யுங்கள்