“காதல்” கணவரிடம் விவாகரத்து கேட்கும் ஜோதிகா.. காரணம் தெரிஞ்சா தூக்கி வாரிப்போட்டுடும்..!

 


90k கிட்ஸ் இன் கனவு கன்னியாக திகழ்ந்த ஜோதிகா தமிழில் முன்னணி நடிகராக இருக்கும் சூர்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர் நடிப்பில் வெளி வந்த வாலி திரைப்படத்தில் தனது அற்புதமான நடிப்புத் திறனை வெளிப்படுத்திய இவருக்கு அடுத்தடுத்து திரைப்பட வாய்ப்புகள் வந்து சேர்ந்தது. 

இதனை அடுத்து தமிழில் பல முன்னணி நடிகர்களோடு ஜோடி போட்டு நடித்து தனது நடிப்புத் திறனை வெளிப்படுத்தியதை அடுத்து இவருக்கு தென்னிந்திய திரை உலகில் அதிக அளவு ரசிகர்கள் இருக்கிறார்கள். 

தமிழ் படங்கள் மட்டுமல்லாமல் தெலுங்கு, மலையாளம் என தென்னிந்திய மொழிகளில் நடித்து வந்த இவர் சூர்யாவை திருமணம் செய்து கொண்ட பிறகு திரைத்துறையில் இருந்து சில நாட்கள் விலகி இருந்தார். இதனை அடுத்து 36 வயதிலேயே என்ற திரைப்படத்தில் நடித்து ரீ என்ட்ரி கொடுத்து மீண்டும் மக்கள் மனதில் நீங்காத இடத்தை பிடித்துக் கொண்டார்.

இவர் தற்போது தமிழ், மலையாளம், ஹிந்தி படங்களில் முக்கிய ரோல்களில் நடித்து வருகிறார். அந்த வகையில் மலையாளத்தில் மலையாள சூப்பர் ஸ்டார் ஆன மம்முட்டியோடு இணைந்து காதல் தி கோர் என்ற திரைப்படத்தில் மம்முட்டிக்கு ஜோடியாக நடித்திருக்கிறார். 

இந்த திரைப்படமானது அண்மையில் வெளி வந்து இரண்டே நாளில் சுமார் 2.30 கோடி அளவு வசூல் சாதனை புரிந்தது. மேலும் இந்த படத்தில் மம்முட்டி தன் பால் ஈர்ப்பு வைத்திருக்கும் தன்மை கொண்டவராக இருந்ததின் காரணத்தால் விவாகரத்து செய்யக்கூடிய ரோலில் ஜோ நடித்திருந்தார்.

மேலும் இந்த கதையில் கணவருக்கும், மனைவிக்கும் இடையே என்ன நடக்கிறது என்பதை சுற்றியே கதை அமர்ந்துள்ளது. அப்படிப்பட்ட இந்த படத்தை பலரும் பார்த்து வருவதோடு எப்படி எல்லாம் படம் எடுக்க யோசிக்கிறார்கள் என பேசவும் வைத்துவிட்டது. மேலும் இந்த படத்தை பற்றி ரசிகர்களின் மத்தியில் பல வித கோணங்களில் பட்டிமன்றங்கள் நடந்து வருகிறது. 

 இந்த நிலையில் அனைவரும் கட்டாயம் பார்க்கக்கூடிய திரைப்படங்களில் ஒன்றாக இந்த திரைப்படம் இருக்கும் என்று படத்தை பார்த்தவர்கள் கருத்துக்களை பதிவு செய்து வருகிறார்கள். மேலும் சில இணையவாசிகள் இந்தப் படத்தில் ஜோதிகா விவாகரத்து பெற்றதை பற்றி பல்வேறு விஷயங்களை பேசி வருகிறார்கள்.