சின்னத்தம்பி திரைப்படத்தில் நடித்த நடிகர் பிரபு மற்றும் குஷ்பூ அடுத்தடுத்து படங்களில் இணைந்து நடித்து மக்களின் மத்தியில் வெற்றி படங்களை கொடுத்ததை அடுத்து இருவருக்குள்ளும் காதல் மலர்ந்தது.
மேலும் திரைப்படங்களில் மட்டுமல்லாமல் நிஜ வாழ்க்கையிலும் இவர்கள் கெமிஸ்ட்ரி நன்றாக இருந்த காரணத்தால், இவர்கள் இருவரும் திருமணம் செய்து கொண்டார்கள் என்று அப்போதே கிசுகிசுக்கள் பரவியது.
90 காலகட்டங்களில் ரசிகர்களின் கனவு கன்னியாக திகழ்ந்த குஷ்பூ தமிழில் பல முன்னணி நடிகர்களோடு நடித்திருக்கிறார். மேலும் தெலுங்கு, மலையாளம், கன்னடம் போன்ற மொழிகளில் அசாத்தியமான திறமையை வெளிப்படுத்தி இருக்கிறார்.
எனவே தான் எந்த நடிகைக்கு இல்லாத அளவு குஷ்புவுக்கு ரசிகர்கள் அவருக்கு கோயிலைக் கட்டி கொண்டாடினார்கள். இவர் தமிழில் மட்டும் ஏறக்குறைய நூற்றுக்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருக்கிறார். குஷ்பூ தற்போது அரசியலிலும் ஈடுபட்டு வருகிறார்.
இவர் சின்னத்தம்பி படத்தில் நடித்த போது இவருக்கும் பிரபுவுக்கும் இடையே காதல் ஏற்பட்டதாகவும் இந்த காதல் விவகாரம் சிவாஜியின் தலையிட்டால் முடிவுக்கு வந்தது என்று கூறப்பட்டது.
ஆனால் பிரபுவுக்கும் குஷ்புவுக்கும் திருமணம் நடந்து விட்டதாக டாக்டர் காந்தராஜ் தெரிவித்திருக்கிறார்.
இவர் சினிமா வரலாறு தொடர்பாக பல்வேறு சேனல்களுக்கு பேட்டி அளித்து பிரபலமானவர் சமீபத்தில் You tube சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் இந்த விஷயத்தை போட்டு உடைத்து இருக்கிறார்.
அதுமட்டுமல்லாமல் குஷ்பூ பிரபுவின் காதல் தலைப்புச் செய்தியாக வெளி வந்ததை அடுத்து இவர்கள் ஒன்றாக இணைந்திருக்கும் போட்டோக்கள் அன்றைய பத்திரிகைகளில் பிரபலமாக வலம் வந்தது.
ஏற்கனவே பிரபுவுக்கு திருமணமாகி குழந்தைகள் இருந்த நிலையில் இந்த விஷயத்தில் பிரபுவின் முதல் மனைவியின் குடும்பத்தைச் சார்ந்தோர் கடுமையான எதிர்ப்பை தெரிவித்து இருந்தார்கள்.
அதுமட்டுமல்லாமல் குஷ்பூ பிரபு திருமணம் செய்து கொண்ட செய்தியை வெளியிட்ட பத்திரிக்கை கூட அவர்கள் கொடுத்துத்தான் அந்த செய்தியை போட்டதாக விளக்கம் தந்திருப்பதை டாக்டர் காந்தராஜ் சுட்டிக்காட்டி இருக்கிறார்.