தற்போது விஜய் டிவியில் பிக் பாஸ் சீசன் 7 படு பிரமாண்டமான முறையில் நடந்து வருகிறது. இந்த சீசனை பற்றி பல்வேறு விதமான கருத்துக்கள் வெளி வந்துள்ளது.
அந்த வகையில் இந்த சீசனில் போட்டியாளராக பங்கேற்ற பிரதீப் எல்லை மீறி நடந்து கொண்டதாலும், பிக் பாஸ் வீட்டில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்ற பெயரில் பல்வேறு வகையான விமர்சனங்கள் வந்துள்ளது.
இது குறித்த உண்மை நிலையை வலைப்பேச்சு பிஸ்மி தனது youtube பக்கத்தில் பகிரங்கமாக சில தகவல்களை பதிவு செய்திருக்கிறார்.இதில் பிரதீப் செயல்கள் விரும்பத்தகாத வகையில் இருப்பதாகவும், அவர் பேசும் சரியில்லை என்பதை கூறியிருக்கிறார்.
இதற்கெல்லாம் அவர் மன்னிப்பு கேட்டிருந்தாலும் அவர் செய்த தவறு மிகப்பெரியது. அது போல இவர் தான் டைட்டில் வின்னர் ஆக வருவார் என்ற நம்பிக்கை பலர் மத்தியிலும் இருந்ததையும் இவர் குறிப்பிட்டு இருக்கிறார்.
மேலும் சக போட்டியாளர்கள் இவரை அச்சத்தோடு பார்த்திருக்கிறார்கள்.
டிஆர்பி ரேட்டிங் -காக ஒரு மனிதன் எவ்வளவு தவறுகள் செய்தாலும் அதை தட்டிக் கேட்காமல் அப்படியே கமல் விட்டு விட்டார்.
அதுமட்டுமல்லாமல் பிக் பாஸ் சீசன் 7ல் பாலியல் சீண்டல்கள் ஒவ்வொரு பெண் போட்டியாளர்களுக்கு நடந்து கொண்டே தான் இருக்கிறது. இதை வெளியே சொல்லாமல் அவர்கள் பயந்து போனதாக பிஸ்மி கூறியிருக்கிறார்.
அதற்கு ஏற்றது போலவே ஜோதிகா இரவு நேரங்களில் தூங்காமல் உட்கார்ந்து இருப்பதும் தனக்கு தூக்கம் வராமல் இருக்கும் ராத்திரியில் எந்த பொருளாவது உடைந்தால் பிரதீப் இடத்தை தான் பாப்போம் என்று அடுக்கடுக்கான புகாரை தந்து இருக்கிறார்.
எதற்கு முன் நடந்த பிக் பாஸ் சீசனில் இது போன்ற நபர்களை வெளியேற்றி இருக்கிறார்கள். ஆனால் இந்த சீசனில் அது நடக்கவில்லை.
எனவே கமலஹாசன் விரைவில் இந்த பிரச்சனைக்கு முடிவு கட்டினால் சிறப்பாக இருக்கும் என தனது கருத்தை பதிவு செய்திருக்கிறார்.
மேலும் இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் வண்ணத்திரை பக்கத்திற்கு மேலான உங்கள் ஆதரவை கொடுங்கள். உங்கள் நண்பர்களுக்கும் இதை ஷேர் செய்யுங்கள்.