விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் சீசன் 7 தற்போது பரபரப்பான கட்டத்தை எட்டியுள்ளது என கூறலாம். இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கக்கூடிய கமலஹாசன் பிக் பாஸ் வீட்டில் நடந்து வரும் ஆத்து மீறல்கள் பற்றி கவலை இல்லாமல் இருப்பதாக பலவிதமான கருத்துக்கள் வெளிவந்துள்ளது.
இதனை அடுத்து ரெட் கார்ட் மூலம் வெளியேற்றப்பட்ட போட்டியாளரான பிரதீப் மூலம் பல வகையான சலசலப்புகள் வீட்டுக்குள் உருவானது. இதனை அடுத்து கலவை ரீதியான விமர்சனங்கள் வந்து சேர்ந்தது.
இந்நிலையில் ஏற்கனவே பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு விளையாடிய விஜயகுமாரின் மகளாகிய வனிதா விஜயகுமாரின் மகள் தற்போது நடக்கும் பிக் பாஸ் சீசன் 7 ல் கலந்து கொண்டு தனது துடுக்குத்தனத்தை அரங்கேற்றி விட்டார்.
அது மட்டுமல்லாமல் ஏற்கனவே நடிகை விசித்ராவை வாய்க்கு வந்தபடி பேசி வாயாடி என்ற பட்டத்தை பெற்றுக் கொண்டதோடு பெரியவர்கள் என்ற மட்டு மரியாதை இல்லாமல் பேசி வருவதை பலரும் கண்டித்து இருக்கிறார்கள்.
இந்நிலையில் தன் வயதுக்கு மீறிய வகையில் கத்தி பேசுவது மரியாதை இல்லாமல் பெரியவர்களிடம் நடந்து கொள்வது என பல அவப்பெயர்களைப் பெற்றிருக்கும் இவர் எல்லாவற்றிற்கும் மேலாக தற்போது தினேஷை பேசிய வார்த்தையால் அனைவரும் கடுமையான எதிர்ப்புகளை பதிவு செய்து வருகிறார்கள்.
இதற்கிடையில் நிக்சன் காதல் வலையில் சிக்கி இருக்கின்ற ஐஷு, பிரச்சனையில் தூக்கி காட்டி இருக்கலாம் என்று தினேஷ் கூறியிருக்கிறார்.
இதற்கு ஜோவிகா தன்னுடைய வயதையும் மறந்து தகுதிக்கு மீறிய வார்த்தையை பேசி இருக்கிறார்.
அந்த வார்த்தை அவர் ஆம்பளையா? என்பது தான். இந்த வார்த்தையை கூறியதை அடுத்து முளைச்சு மூணு இலை விடல அதுக்குள்ள இப்படியா? என்று பலரும் பலவிதமான கருத்துக்களை கூறியிருக்கிறார்கள்.
மேலும் வயது வித்தியாசம் இல்லாமல் கொச்சையாக பேசியிருக்கும் இவரை கமலஹாசன் பிக் பாஸ் போட்டிகளில் இருந்து நீக்க மாட்டார். பார்த்தும் பார்க்காதது போல கேட்டும் கேட்காது போல சென்று விடுவார் எனக் கூறுகிறார்கள்.
இனியாவது ஜோவிகாவிற்கு உரைக்கும் படி கமல் அறிவுரை கூறுவாரா? அல்லது இந்த நிலை நீடிக்குமா? என்பது இனிவரும் நாட்களில் தெரியவரும்.