“சிறு வயசுலயே கணவருடன் எனக்கு அது நடந்துடுச்சு..” - விவாகரத்து முடிவு குறித்து ஸ்வர்ணமால்யா..!

 


ஆரம்ப நாட்களில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வந்த இளமை புதுமை என்ற துள்ளலான நிகழ்ச்சியின் தொகுப்பாளராக அறிமுகம் ஆனவர் தான் ஸ்வர்ணமாலியா. சினிமா நடிகைகளுக்கு இருக்கக்கூடிய அளவு ரசிகர்கள் பட்டாளம் இவருக்கு இருந்தது. 

இதனை அடுத்து இவர் திரைப்படத்தில் நடிப்பதில் கவனத்தை செலுத்தினார். அந்த வகையில் மணிரத்தினம் இயக்கிய அலைபாயுதே படத்தில் நடிகையாக அறிமுகம் ஆனார். இவர் இளமை புதுமை நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் போது பன்னிரண்டாம் வகுப்பு தான் படித்துக் கொண்டிருந்தாராம். 

அந்த நிகழ்ச்சியில் துரு, துரு என இருப்பினும் உண்மையில் மிகவும் அமைதியான கேரக்டர் குணம் கொண்டவர் என்பதை அண்மையில் Youtube சேனல் பேட்டி ஒன்றில் தெரிவித்திருக்கிறார். 

மேலும் அந்தப் பேட்டியில் இவர் தனது திருமண வாழ்க்கை குறித்தும், 21 வயதில் தனக்கு திருமணம் ஆகி விட்டதாகவும், அதே வேகத்தில் விவாகரத்தும் நடந்து முடிந்து விட்டது. எனக்கு எதனால் விவாகரத்து ஆனது என்ற காரணம் கூட அப்போது தெரியவில்லை. 

சிறு வயசுலயே கணவருடன் எனக்கு அது நடந்துடுச்சு.. நல்லது, கெட்டது தெரியாத அந்த வயதில் எனக்கு அமெரிக்க வாழ்க்கையும் செட் ஆகவில்லை. விவாகரத்துக்கு பிறகு என்னை விட என் பெற்றோர்கள் தான் மிகவும் கஷ்டப்பட்டார்கள் 

மேலும் என்னை படிக்கச் சொன்னார்கள். இதனை அடுத்து ஒரு மிகப்பெரிய பிரேக்கப் சண்டையில் இருந்த எனக்கு மிகுந்த மன அழுத்தம் ஏற்பட்டது. இந்த மன அழுத்தத்தின் காரணத்தால் இதெல்லாம் ஒரு வாழ்க்கையா? எதற்காக வாழ வேண்டும் என்பது போன்ற எண்ணம் ஏற்பட்டு தவறான முடிவை தேடிக் கொள்ளலாம் என்று தோன்றியது. 

இந்த நிலையில் எனது சகோதரி என்னை மருத்துவரிடம் அழைத்துச் சென்றதை எடுத்து இரண்டு மாதத்திற்கு மன அழுத்துக்கான மருந்துகளை எடுத்துக்கொண்டு தற்போது அந்த மன அழுத்தத்தில் இருந்து வெளி வந்து நன்றாக இருக்கிறேன் என பேட்டியில் பேசியிருக்கிறார். 

இதனை தெரிந்து கொண்ட ரசிகர்கள் அனைவரும் இவருக்கு ஆதரவாக பேசி வருவதோடு, மீண்டும் கம் பேக் கொடுத்தால் நீங்கள் சிறப்பாக இருக்கலாம் என்ற கருத்தையும் முன் வைத்திருக்கிறார்கள்.