தமிழ் திரை உலகில் முன்னணி நடிகையாக திகழும் நடிகை திரிஷா குறித்து மன்சூர் அலிகான் பேசிய பேச்சானது கடுமையான சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ளது. அது மட்டுமல்லாமல் இணையத்தில் கடுமையான அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்க கூடிய இவரது பேச்சுக்கு கண்டனங்கள் வலுத்து வருகிறது.
இந்த நிலையில் தன் வாய்க்கு பூட்டு போடாமல் மன்சூர் அலிகான் மேலும், மேலும் சர்ச்சைகளை கிளப்புவதில் குறியாக இருக்கிறார். இதற்கு காரணம் மேலும் லியோ படத்தில் இவர் நடித்ததை பற்றி இவரே விமர்சனம் செய்திருப்பது தான்.
லியோ படத்தைப் பற்றி இவர் கூறுகையில் திரிஷாவுடன் நடிக்கிறேன் என்றதும் நிச்சயமாக ஒரு பெட்ரூம் சீன் இருக்கும் அதில் நடிகை குஷ்பூ, ரோஜாவை மாதிரி திரிஷாவை கட்டிலில் தூக்கி போடலாம் என நினைத்தேன் என்று ஏற்கனவே கீழ்த்தரமாக அவர் பேசியிருந்தது அனைவருக்கும் நினைவில் இருக்கலாம்.
இந்த பேச்சினை அடுத்து நடிகை திரிஷா, மன்சூர் அலிகானுக்கு கண்டனம் தெரிவித்து ஒரு பதிவை வெளியிட்டார், இதனை அடுத்து திரையுலக பிரபலங்கள் அனைவரும் திரிஷாவுக்கு ஆதரவாக குரல் கொடுத்து வருகிறார்கள்.
ஆனால் மன்சூர் அலிகான் தன் தவறை சுத்தமாக உணராமல் திரிஷாவை பற்றி தவறாக எதுவும் பேசவில்லை. என்னிடம் எந்த விளக்கமும் கேட்காமல் நடவடிக்கையை எடுப்பது நடிகர் சங்கம் செய்த மிகப்பெரிய தவறு என்பதை சுட்டிக்காட்டி இருக்கிறார்.
அது மட்டுமல்லாமல் இந்த விவகாரத்திற்காக தான் எந்த விதத்திலும் மன்னிப்பு கேட்க தயாராக இல்லை என்ற கருத்தை முன் வைத்திருக்கும் மன்சூர் அலிகான், மகளிர் ஆணையம் என்ன கிழித்து கொண்டிருக்கிறது என்று கேள்வியை எழுப்பி இருக்கிறார்.
இந்த சூழ்நிலையில் நடிகர் சங்கம் மன்சூர் அலிகான், திரிஷா விவாகரத்தில் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கூறியுள்ளது. ஆனால் மன்சூர் அலிகான் பத்திரிக்கையாளர் சந்திப்பு ஒன்றில் நான் பெண்களை தவறாக நினைக்க மாட்டேன். எல்லோரையும் அரவணைத்து செல்லக்கூடிய தன்மை கொண்டவன் என்று கூறியிருக்கிறார்.
அது மட்டுமல்லாமல் தமிழ்நாடு தன் பக்கம் இருக்கிறது.
எனவே என்னை யாரும் பயமுறுத்த வேண்டிய அவசியம் இல்லை. நடிகை குஷ்பூ இருக்கும் தேசிய மகளிர் ஆணையத்தை பார்த்து கேட்கிறேன். இதெல்லாம் ஒரு விஷயமா? மூத்த நடிகர் எஸ் வி சேகர் காரைக்குடியில் ஷர்மா, குஷ்பூவை பற்றி அவதூறு பேசினார்களே அவர்களை ஏன் கைது செய்ய சொல்ல வில்லை.
மேலும் நீட் தேர்வில் தவறான முடிவுக்கு சென்ற அனிதாவிற்கு மகளிர் ஆணையம் என்ன செய்தது உங்களுக்கெல்லாம் சூடு சொரணை இருக்கிறதா?
இவ்வளவு ஏன் மணிப்பூரில் பெண்கள் மீது தாக்குதல் நடந்த போது உங்கள் ஆணையம் என்ன கிழித்தது.. மன்சூர் அலிகான் என்றால் இளிச்சவாயனா? என்னை எப்படி வேண்டும் என்றாலும் ஏறி மிதிப்பீர்களா? என்று பேசி குஷ்புவை கிழி கிழி என்று கிழித்துவிட்டார்.