நான் திரிஷாவின் காதலுக்கு வில்லியா.? - ராகினி திரிவேதி ஓப்பன் டாக்..!

 

தென்னிந்திய திரை உலகில் சுமார் 40 ஆண்டுகளாக எவர்கிரீன் நடிகையாக இருக்கும் நடிகை திரிஷா பற்றி நடிக்க ஆரம்பித்த காலங்களில் இருந்தே பல முன்னணி நடிகர்களோடு கிசு கிசு வந்துள்ளது. 

இதில் இவர் தெலுங்கு நடிகரான ராணாவுடன் காதலில் இருந்ததாகவும் அடிக்கடி இருவரும் சந்தித்துக் கொள்வது பிறகு அவர்களுடைய பட வேலைகளில் பிஸியாவது என இருந்திருப்பதாக செய்திகள் பரவியுள்ளது. 

அப்படி இருவரும் ஒருவரை ஒருவர் காதலித்து வந்த நிலையில் எப்படி பிரிவு ஏற்பட்டது என்று தெரியுமா? இவர்கள் காதலில் ஒரு நடிகை தான் வில்லியாக உள்ளே புகுந்து இவர்களின் காதல் வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளி வைத்து விட்டார் என்று தெரிய வந்துள்ளது. 

இவர்களின் இந்த நிரந்தரமான பிரிவுக்கு காரணமானவர் ஓரு நடிகை என்ற விஷயத்தை அறிந்து கொண்ட ரசிகர்கள் பலரும் அதிர்ச்சியில் ஆழ்ந்திருக்கிறார்கள். அந்த நடிகை வேறு யாருமில்லை, கன்னட நடிகை ராகினி திரிவேதி தான். 

இந்த உண்மையை அவரே தற்போது கூறி இருப்பது தான் மேலும் அதிர்வலைகளை அதிகரித்து உள்ளது. இவர் தமிழில் நிமிர்ந்து நில் என்ற திரைப்படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். ராணாவுக்கும் திரிஷாவுக்கும் பல்வேறு முரண்பட்ட கருத்துகளை ஏற்படுத்தி இருவரையும் பிரிய வைத்து விட்டார். 

ஏற்கனவே போதைப்பொருள் வழக்கில் சிக்கி சின்னாபின்னமான ராகினி பற்றி உங்களுக்கு தெரிந்திருக்கும். இந்த விவகாரத்தில் தான் திரிஷா ராணா இடையே ஆன தவறான புரிதல் ஏற்பட்டு பிரிவு ஏற்பட்டது என்றெல்லாம் பலரும் பலவிதமாக பேசி வருகிறார்கள். 

இதனை அடுத்து இவரே ஒரு பேட்டியில் திரிஷா மற்றும் ராணாவின் காதல் முடிவுக்கு வர காரணம் தான் என்று கூறியிருக்கிறார். அதுமட்டுமல்லாமல் இது பற்றி யாராவது தன்னிடம் ஒரு வார்த்தை கேட்டார்களா? எதுவுமே தெரியாத நிலையில் நான் அவர்களின் காதலை முறித்து விட்டேன் என்று கூறுகிறார்கள். 

இதனை நான் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. எனினும் என்னுடைய மௌனத்தை பலரும் தவறாக புரிந்து கொண்டதால் தான் நான் இதைப் பற்றி பேசுகிறேன். ராணாவுக்கும் எனக்கும் இடையே இருப்பது மிகச் சிறந்த நட்பு தான். காதல் ஏதுமில்லை நானும் ராணாவும் சேர்ந்து எடுத்துக் கொண்ட புகைப்படங்களை வெளியிட்டால் நான் அவரை காதலிக்கிறேன் என்பது எப்படி ஆகும். 

எனவே நடிகர் ராணாவை நானும், திரிஷாவும் காதலிக்கிறோம் என்ற தகவல் பொய்யானது. இருவரும் ஒருபோதும் காதலிக்கவில்லை என்று ரிவர்ஸ் ஆக குண்டை தூக்கி போட்டார்.