உங்களுக்கு வயசே ஆகல..! - கொள்ளை அழகில் சினேகா..! ரீசென்ட் கிளிக்ஸ்..!

 

பார்த்ததுமே மனசுக்குள் ஆயிரம் வாட்ஸ் மின்னல்கள் ஏற்பட்ட படி ஒரு உணர்வை ஏற்படுத்தியிருக்கும் சினேகாவின் புகைப்படம் ஒவ்வொன்றும் ரசிகர்களின் மனதில் நச்சென்று இடம் பிடித்து விட்டது. 

 இந்த போட்டோசை பார்த்து வரும் 2k கிட்ஸ் கூட டூயட் பாட ரெடியா? என்று கேள்விகளை எழுப்பி இருக்கிறார்கள். அந்த அளவு பார்ப்பதற்கு மகாலட்சுமியை போல காட்சி அளித்திருக்கும் இந்த போட்டோஸ் தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. 

வயதானாலும் இன்னும் இளமையும், அழகும் இவரை விட்டு செல்லவில்லை என்று சொல்ல கூடிய அளவிற்கு சிரிப்பழகி வெளியிட்டு இருக்கும் போட்டோவில் இவரது பல் அழகு ரசிக்கும் படி உள்ளது. 


திரை உலகில் இவர் பெரும்பாலான படங்களில் குடும்ப குத்து விளக்காய் தான் நடித்திருக்கிறார். சிரிப்பழகி ஆன இவரை புன்னகை அரசி என்று ரசிகர்கள் அழைத்திருக்கிறார்கள். 

தமிழ் மொழி மட்டுமல்லாமல் தெலுங்கு மலையாள படங்களில் நடித்திருக்கும் இவர் நடிகர் பிரசன்னாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். தற்போது இந்த ஜோடிக்கு ஒரு மகளும், ஒரு மகனும் இருக்கிறார்கள். 


அண்மைக்காலமாக இவர் சின்னத்திரை ரியாலிட்டி ஷோக்களில் பங்கேற்று வருகிறார். இந்நிலையில் தான் சேலை கட்டிக்கொண்ட லேட்டஸ்ட் போட்டோவை வெளியிட்டு ரசிகர்களை ரசனையில் ஆழ்த்தி விட்டார். 

 க்யூட்டான இந்த போட்டோஸ்க்கு அதிக அளவு லைக்குகள் இவர் எதிர்பாராத அளவிற்கு வந்துள்ளதால் மிகுந்த மகிழ்ச்சியில் இருக்கிறார் என்று கூறலாம். நீங்களும் இந்த போட்டோக்களை பார்த்துவிட்டு உங்கள் மேலான கருத்துக்களை எங்களோடு பகிர்ந்து கொள்ளுங்கள்.