விவாகரத்தாகிவிட்ட நிலையில் இரண்டு குழந்தைகளுக்கு தாயான சமந்தா..! - என்ன நடக்குது..?


தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் மிகச் சிறப்பான நடிப்பை வெளியிட்டு முன்னணி நடிகையாக இருந்த நடிகை சமந்தா சமீப காலமாக உடல்நலக் குறைபாடு காரணத்தினால் சினிமாவில் இருந்து விலகி இருக்கிறார். 

வெளிநாடுகளில் சென்று சிகிச்சை மேற்கொண்டு இருக்கக்கூடிய இவர் தற்போது தமிழ் சினிமாவில் ரீ என்ட்ரி கொடுக்கக்கூடிய முயற்சிகளில் இறங்கி இருக்கிறார். 

மேலும் தற்போது சமூக சேவைகளில் அதிக அளவு ஈடுபட்டு வரக்கூடிய இவர் விரைவில் இரண்டு குழந்தைகளை தத்தெடுத்து அந்த குழந்தைகளுக்கான முழு பொறுப்பையும் ஏற்க உள்ளதாக திரைத்துறை வட்டாரங்களில் இருந்து அதிகாரப்பூர்வமான பேச்சுக்கள் வெளிவந்துள்ளது. 

நடிகை சமந்தா தெலுங்கு நடிகரான நாக சைதன்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இதனை அடுத்து இவர்கள் இருவருக்கும் கருத்து வேற்றுமை ஏற்பட்டதை அடுத்து விவாகரத்து பெற்று பிரிந்து விட்டார்கள்.

இந்நிலையில் சமந்தாவின் பெற்றோர் இரண்டாவது திருமணத்திற்கு வற்புறுத்தி வருகிறார்கள். ஆனால் நடிகை சமந்தா அதற்கு சம்மதம் தெரிவிக்காமல் மறுமணம் செய்து கொள்ளக்கூடிய எண்ணம் தனக்கு இல்லை என்றும் வேண்டுமென்றால் குழந்தைகளை தத்தெடுத்து வளர்க்கலாம் என்று கூறி உள்ளதாக தகவல்கள் வெளி வந்த வண்ணம் உள்ளது. 

சமந்தாவின் இந்த நல்ல நல்ல மனதை புரிந்து கொண்ட ரசிகர்கள் மற்றும் பலன் இவருக்கு ஆதரவு தெரிவித்திருப்பதோடு வாழ்த்துக்களையும் தெரிவித்து வருகிறார்கள்.

எனவே விரைவில் இரண்டு குழந்தைகளுக்கு தாயாகி விடுவார் என்று வலைதளங்களில் பதிவுகள் வெளிவந்து உள்ளது. மேலும் இந்த பதிவு தற்போது ட்ரெண்டிங்காக மாறி வருவதால் அனைவரும் இதனை திரும்பத் திரும்ப படித்து சமந்தாவுக்கு ஆதரவு தெரிவித்து வருகிறார்கள்.