"வாய்ப்பு கொடுத்தால் படுக்கைக்கு ஓகே சொல்லுவேன்.. - ஆனா,.." - ரேகா நாயர் ஓப்பன் டாக்..!

 


அடச்சி.. இதெல்லாம் ஒரு பொழப்பா? என்று கேட்கக் கூடிய அளவிற்கு தற்போது ரேகா நாயர் ஓப்பனாக பேசியிருக்கும் பேச்சால் இணையமே நடுங்கி விட்டது என்று கூறலாம். பெண்மைக்கு என்று இலக்கணம் வகுத்த நம் நாட்டிலா? இப்படிப்பட்ட பேச்சுக்கள் எழுகிறது என்பதை நினைக்கும் போது சற்று வருத்தம் ஏற்படுவது இயல்பு தான். 

அதுவும் சினிமா துறை ஆரம்பித்த காலம் கட்டங்களில் இருந்தே அட்ஜஸ்ட்மென்ட் பற்றி வெளியே தெரியாது இருந்தது. தற்போது ஊடகங்களின் ஆதிக்கத்தால் அந்த வார்த்தை அடிக்கடி பயன்படுத்துவது மட்டுமல்லாமல் அது போன்ற சம்பவங்களை தோல் உரித்து காட்டவும் உபயோக கரமாக உள்ளது என கூறலாம். 

ரேகா நாயர் பார்த்திபன் இயக்கத்தில் வெளி வந்த இரவின் நிழல் என்ற திரைப்படத்தின் மூலம் ரசிகர்கள் மத்தியில் அறிமுகமாகி பிரபலமான நடிகையாக திகழ்கிறார். இவர் சமீபத்தில் பேட்டி ஒன்று கலந்து கொண்டு பேசிய பேச்சு தான் அனைவரையும் ஆட்டம் காண வைத்துவிட்டது. 

இந்தப் பேட்டியில் அவர் என்னிடம் யாராவது பட வாய்ப்பு கொடுக்கிறேன் என்ற பெயரில் படுக்கைக்கு அழைக்கிறார் என்றால், அந்த நபர் எனக்கு பிடித்திருக்கும் பட்சத்தில் நான் போவேன். அவரை பிடிக்கவில்லை என்றால் போகமாட்டேன் என்று வெளிப்படையாக பேசி இருக்கிறார். 

மேலும் இதற்கான விளக்கத்தை அவர் கொடுக்கும் போது பட வாய்ப்புக்காக படுக்கைக்கு அழைக்கும் போது போக மறுத்துவிட்டால் உங்களை வற்புறுத்த போவது கிடையாது. ஆனால் அட்ஜஸ்ட்மென்ட் செய்துவிட்டு ஒரு பத்து வருடம் கழித்து அந்த இயக்குனர், தயாரிப்பாளர் இப்படி செய்தார் என்று கூறுவது என்னால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை என்று கோபமாக பேசி இருக்கிறார். 

இதனை எடுத்து ஒரு சிலர் இவர் பேச்சில் நியாயம் உள்ளது என்று கூறுகிறார்கள். தன் தேவைக்காக உடலை விற்கக்கூடிய நடிப்புத் தொழில் தேவையா? அது ஒரு பொழப்பா? என்று சிலர் ரசிகர்கள் காண்டாக பேசியிருக்கிறார்கள். இதனால் தற்போது இணையம் முழுவதும் ரேகா நாயர் பேசிய பேச்சுதான் தற்போது வைரலாக பரவி வருகிறது.