ஆக்சன் கிங் என்று அனைவராலும் அன்போடு அழைக்கப்பட்ட நடிகர் அர்ஜுன் 90 காலகட்டங்களில் தமிழ் சினிமாவில் மட்டுமல்லாமல் தென்னிந்திய மொழிகளிலும் சிறப்பான முறையில் தனது நடிப்பை வெளிப்படுத்தியவர்.
60 வயதை எட்டி இருந்தாலும் இன்று இருக்கும் ஹீரோக்களுக்கு டாப் கொடுக்கக் கூடிய அளவிற்கு தனது உடலை கட்டுக்கோப்பாக வைத்திருக்கும் இவர் கன்னட திரைப்படத்தின் மூலம் தான் நடிகராக அறிமுகம் ஆனார்.
இதனை அடுத்து இவர் தமிழில் இயக்குனர் ராமநாராயணன் இயக்கத்தில் 1984 ஆம் ஆண்டு வெளிவந்த நன்றி என்ற திரைப்படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகம் செய்யப்பட்டார்.
இந்த படம் மாபெரும் வெற்றி பெற்றதை அடுத்து இவருக்கு கடமை, நாகம், இளமை, வேகம், எங்கள் குரல் போன்ற பட தமிழ் படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது.
மேலும் இவர் ஜெய்ஹிந்த் மருதமலை, ஏழுமலை போன்ற தமிழ் படங்களில் நடித்திருக்கிறார்.
திரைப்படங்களில் நடிக்கும் போதே மிகச்சிறந்த நடிகை ஒருவரை காதலித்து வந்திருக்கிறார். ஆனால் இவரின் காதல் ஒரு தலை காதல் ஆகிவிட்டது.
இந்த நடிகை வேறு யாருமில்லை இவரோடு எங்கள் குரல் மற்றும் யார் போன்ற திகில் படத்தில் நடித்த நடிகை நளினி தான்.
இவர்கள் இருவரும் இணைந்து நடித்த இந்த இரு படத்திலும் இவர்களது கெமிஸ்ட்ரி பெரிய அளவில் பேசப்பட்டது. எனினும் தனது காதலை வெளிப்படுத்துவதற்கு முன்பே நளினி ராமராஜை காதலித்து வீட்டுக்கு தெரியாமல் திருமணம் செய்து கொண்டார்.
அர்ஜுனோ நடிகை நளினியை உருகி உருகி காதலித்து இருப்பதாக அவரது நண்பர்களிடம் கூறிய அவர் நளினிடம் ஒருமுறை கூட கூறவில்லை.
திருமணமான பிறகு இவர் அளித்த பேட்டி ஒன்றில் இந்த தகவலை கூறியிருக்கிறார். இந்த பிளாஷ்பேக் காதல் குறித்த தகவல் தான் மீண்டும் பேசும் பொருளாக இப்போது மாறிவிட்டது என கூறலாம்.