நயனை பின்னுக்குத் தள்ளிமுதல் இடத்தை நோக்கி செல்லும் நடிகை..!" - அதிர்ஷ்டம் அல்ல உழைப்புக்கு கிடைத்த வெற்றி..!

 

உங்கள் திறமைக்கு எல்லையே இல்லை என்று கூறும்படி தனது அபார உழைப்பால் இன்று முதல் இடத்திற்கு முன்னேறி இருக்கும் சவுத் குயின் திரிஷா பற்றிய கருத்துக்களை எந்த பதிவில் படிக்க தெரிந்து கொள்ளலாம். 

திரைத் துறையில் அடி எடுத்து வைப்பதும், காணாமல் போவதும் நடிகைகளுக்கு ஏற்படக்கூடிய இயல்பான விஷயம் தான். ஆனால் சுமார் 20 ஆண்டுகளுக்கு மேலாக ஹீரோயினியாக நடித்து வரும் திரிஷா தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு, மலையாளம், கன்னடம் என தென்னிந்திய மொழிகளில் சக்கை போடு போட்டும் வரும் நடிகைகளில் ஒருவர். 

தென்னிந்திய மொழிகளில் பல முன்னணி ஹீரோக்களோடு நடித்து தனக்கு என்று ஒரு தனி இடத்தை ரசிகர்கள் மத்தியில் பெற்றிருக்கும் இவர் அந்த இடத்தை பிடிப்பதற்கு தனது அயராத உழைப்பை தான் மூலதனமாக போட்டிருக்கிறார். ஒரு மனிதன் வெற்றி அடைய அதிர்ஷ்டம் மட்டும் இருந்தால் போதாது உழைப்பும் கட்டாயம் தேவை என்பதற்கு முன் உதாரணமாக இருக்கக்கூடிய இவர் 20 ஆண்டுகளாக திரைத்துறையில் இருக்கிறார். 

இது சாதாரண விஷயம் இல்லை. இடையில் சில சறுக்கல்களை சந்தித்தாலும், இளவரசி குந்தவையாக பொன்னியின் செல்வன் 1 படத்தில் நடித்த பிறகு இரண்டாம் இன்னிங்ஸை நின்று விளையாடக் கூடிய வகையில் தளபதி விஜய் உடன் லியோ படத்தையும், தல அஜித் ஒரு விடாமுயற்சி படத்திலும், உலகநாயகன் கமலஹாசனோடு கே ஹெச் 234 திரைப்படத்திலும் ஹீரோயினியாக வலம் வருகிறார். 

திரைத்துறைக்கு வந்த முதல் நாள் கொண்டே கடுமையான உழைப்பை செய்து தனது படங்கள் வெற்றி பெற உழைத்தவர். மேலும் சாதாரண ஹீரோயின் படங்கள் எனினும் கமர்சியல் படங்கள் என்றாலும் எல்லாவற்றுக்குமே முக்கியத்துவம் கொடுத்து நடித்த காரணத்தால்தான் திரிஷாவிற்கு எப்போது மிகப்பெரிய மார்க்கெட் ஏற்பட்டு இருப்பதாக சினிமா பிரபலங்கள் கூறி வருகிறார்கள். 

இதனை அடுத்து வேறு சில ரசிகர்கள் நயன்தாராவின் திருமணத்திற்கு பிறகு அவ்வளவாக திரைப்படங்கள் சொல்லிக் கொள்ளும்படி அவருக்கு அமையவில்லை. இதனை அடுத்து தென்னிந்திய திரை உலகின் நம்பர் ஒன்றாக கூடிய வாய்ப்பு தற்போது திரிஷாவுக்கு கிடைத்துள்ளது என்று கூறி வருகிறார்கள். 

இன்னும் திருமணம் செய்து கொள்ளாமல் தனது கெரியரில் கவனத்தை செலுத்தி வரும் திரிஷா கட்டாயம் முதல் இடத்தை பிடித்து விடுவார், அதற்கு அவரது உழைப்பு கை கொடுக்கும் என கூறலாம்.