காமெடி நடிகர்களில் லொடுக்கு பாண்டி என்ற பெயரை அடைமொழியாக பெற்ற கருணாஸ் பற்றி அதிக அளவு பகிர வேண்டிய அவசியம் இல்லை. கருணாஸ் நந்தா திரைப்படத்தில் லொடுக்கு பாண்டி கேரக்டரில் பிரமாதமாக நடித்திருப்பார்.
இதனை அடுத்து இவருக்கு வில்லன், திருடா திருடி, பிதாமகன் போன்ற படங்களில் நடிக்கக்கூடிய வாய்ப்பு வந்து சேர்ந்தது.
காமெடி நடிகனாக இருப்பதோடு மட்டுமல்லாமல் சில படங்களில் கதாநாயகனாகவும் நடித்திருக்கிறார்.
எனினும் இந்த கதாபாத்திரங்கள் மக்கள் மத்தியில் இவருக்கு பெயரை பெற்று தரவில்லை. இவர் நடிப்பில் வெளிவந்த திண்டுக்கல் சாரதி, ரகளபுரம், அம்பாசமுத்திரத்தில் ஒரு அம்பானி போன்ற படங்களில் தான் இவர் கதாநாயகனாக நடித்திருக்கிறார்.
சினிமாவில் நடிப்பதோடு நின்று விடாமல் அரசியல் ஆர்வம் கொண்ட இவர் பல தேர்தல்களில் போட்டியிட்டு இருக்கிறார். இவர் பிரபல பாடகியான கிரேஸை காதலித்து திருமணம் செய்து கொண்ட விஷயம் உங்களுக்கு மிக நன்றாக தெரியும்.
ஆனால் ஆரம்ப காலத்தில் கிரேஸ் இவரின் காதலை ஏற்றுக் கொள்ளவில்லை.
பின் எப்படி இவர் காதலிக்கு காதலுக்கு சம்மதித்தார் என்பது பற்றி நீங்கள் யோசிக்கலாம். கருணாசுக்கு கிரேஸின் மீது காதல் ஏற்பட கிரேஸ் பாடிய பூ பூக்கும் ஓசை அதைக் கேட்கத்தான் ஆசை என்ற பாடலை கல்லூரி கலை நிகழ்ச்சிக்கு சென்று இருந்த போது கிரேஸ் பாடியிருக்கிறார்.
அந்த சமயத்தில் தான் இவருக்கு அவர் மீது காதல் ஏற்பட்டுள்ளது.
இதனை அடுத்து ஒரு நாள் இவர் பைக்கில் சென்று கொண்டிருக்கும் போது எதேர்ச்சியாக கிரேஸை பார்த்திருக்கிறார்.
அப்போது வண்டியை நிறுத்திவிட்டு அவரிடம் சென்று உன்னிடம் எனக்கு ஒன்று சொல்ல வேண்டும் என்பது போல் உள்ளது எனக் கூறியதோடு மட்டுமல்லாமல், உன்னை பிடித்து உள்ளது உன்னை கல்யாணம் பண்ணிக்கலாமா? என்று கூறியதோடு நிற்காமல் நீ வேண்டாம் என்று சொன்னாலும் நான் பீல் பண்ண மாட்டேன்.
வேற ஒரு பெண்ணை கல்யாணம் பண்ணிக் கொள்வேன் என்று கூறிவிட்டார்.
இதனை அடுத்து ஆரம்பத்தில் கிரேஸ் இவரது காதலை ஒப்புக்கொள்ளவில்லை. பின் கடைசியில் ஓகே சொல்லிவிட்டார் எனினும் இவரது காதலுக்கு இரு வீட்டிலும் எதிர்ப்பு ஏற்பட்டதால் அத்தனையும் சமாளித்து திருமணம் செய்து கொண்டதாக தனது காதல் கதையை சமீபத்தில் வெளிவந்த பேட்டி ஒன்றில் கூறியிருக்கிறார்.
இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுக்கு ஷேர் செய்து எங்கள் பக்கத்திற்கு உங்கள் மேலான ஆதரவை கொடுங்கள்.